பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

அபிராமி அந்தாதி



சென்றே விழினும் கரையேற்
றுகைநின் திருவுளமே
ஒன்றே பலஉரு வேஅரு
வேஎன் உமையவளே.

(உரை) ஓருருவாக உள்ளாய், பல உருவங்களை உடையாய், உருவமற்ற அருவே, எனக்குத் தாயாகிய உமா தேவியே, முன் ஒரு நாள் என்னைத் தடுத்தாட்கொண் டருளினை; அங்ஙனம் ஆட்கொண்டதை அல்ல என்று மறுத்தல் உனக்கு நியாயமா? இனிமேல் அடியேன் என்ன குற்றம் செய்தாலும், கடலுக்கு நடுவே சென்று விழுந்தாலும், என் குற்றத்தை மறந்து கரையேற்றிப் பாதுகாத்தல் நின் திருவுளப்பாங்குக்கு ஏற்றதாகும்.

அன்று : நெஞ்சறி சுட்டு. அல்ல: இல்லையென்னும் பொருளில் வந்தது. கடலென்றதும் கரையேற்றுகை என்பதும் உருவகக் குறிப்பால் பாசக்கடலையும் முத்திக் கரையையும் புலப்படுத்தின. திருவுளமே: ஏகாரம், தேற்றம். ஒன்றே பலவுருவே! “ஒன்றா யரும்பிப் பலவாய் விரிந்து (56) என்பர் பின். பலவுரு: 'பஹுரூபா', (லலிதா, 824); "வெகுரூபிசுக நித்தியகல்யாணி", "வெகு சொரூபி" (திருப்புகழ்), அருவே: 'நிராகாரா' (லலிதா. 137). 30

உமையும் உமையொரு பாகனும்
ஏக உருவில்வந்திங்
கெமையும் தமக்கன்பு செய்யவைத்
தார்இனி எண்ணுதற்குச்
சமயங் களும் இல்லை ஈன்றெடுப்
பாள்ஒரு தாயும்இல்லை
அமையும் அமையுறு தோளியர்
மேல்வைத்த ஆசையுமே.