பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 அபிராமி அந்தாதி

ஒரு செல்வருடைய ஆதரவைப் பெறவேண்டி ஏழை ஒருவன் புறப்படுகிறான். அவா. இருக்கும் இடம் நெடுந் தூரத்தில் உள்ளது. மெல்ல மெல்ல விசாரித்துக்கொண்டு வருகிறான். ஆற்றைக் கடந்து, மலையைக் கடந்து, பல ஊர்களைப் கடந்து, செல்வர் வாழும் ஊருக்கு வருகிறான் அந்த ஊரில் பல வீதிகள் உண்டு. அவற்றைக் கடந்து செல்வர் திருமாளிகை உள்ள வீதியை அடைகிறான். கடைதியில் அவருடைய இல்லத்தையே கண்டுபிடித்து உள்ளே நுழைகிறான். சற்றே திண்ணையில் உட்கார்ந்து இளைப்பாறுகிறான். அப்போது அவன் அந்த மாளிகையை அடைவதற்கு எத்தனை இடங்களைக் கடந்து வரவேண்டியிருந்தது என்பதை நினைத்துப் பார்க்கிறான். சமீபத்தில் கடந்தானே, அந்தத் தெருக்கள் முதலில் நினைவுக்கு வருகின்றன. அப்பால் அவன் கடந்து வந்த ஊர்கள் நினைவுக்கு வருகின்றன. அப்புறம் மலைகள் ஆறு ஆகியவை அடுக்கடுக்காக வருகின்றன. கடைசியில் தான் புறப்பட்ட இடம் அவன் அகக்கண்முன் வருகிறது. அந்த இடத்துக்கும் இப்போது வந்த இடத்துக்கும் உள்ள தூரத்தை எண்ணிப் பார்க்கிறான். அவனுக்கு மலைப்புத் தட்டுகிறது. நாமா இத்தனை தூரமும் கடந்து வந்தோம், நம் சக்தி அவ்வளவு பெரியதா!' என்று தோன்றுகிறது. .

இதே நிலையில் இருக்கிறார் இந்தப் பேரன்பர். எங் கிருந்து தொடங்கினாரோ அது முதலில் நினைவுக்கு வர வில்லை. எதை அடைந்தாரோ, அதற்கு முந்திய நிலை தான் வருகிறது; பின்னும் எண்ணத்தை நீள விடுகையில் அதற்கும் முந்திய முயற்சியை எண்ணிப் பார்க்கிறார். வந்தபோது அமைந்த முறைக்கு நேர்மாறாக இந்த முறை இருக்கிறது. ஓர் ஊருக்கு வந்தவன் திரும்பிப் போகையில், வரும்போது கடைசியில் கண்ட ஊரை முதலில் பாாப்பான், வரும் வழியில் கண்ட காட்சிகள்