பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலனும் காலும் . 1.65

'நீலமேனி வாலிழை பாகத்து - ஒருவன் இருதாள் நிழற்கீழ் மூவகை உலகும் முகிழ்த்தன முறையே'

என்பது அந்தப் பாடல். நீலத் திருமேனியும் தூய ஆபர ணங்களும் கொண்ட அம்பிகையை ஒரு பாதியிலே கொண்ட சிவபெருமானுடைய இரண்டு திருவடி நிழலின் கீழே, மேல், கீழ், நடு என்று அமைந்த மூன்று வகை உலகங்களும் ஒன்றன்பின் ஒன்றாக முறையே தோன்றின' என்பது இந்தப் பாடலின் பொருள்.

சக்தியின் தோற்றம் இல்லாவிட்டால் சிவம் தொழிற் படாது. சக்தி தோற்றியவுடன் படைப்பு முதலிய தொழில்கள் தொடங்குகின்றன. முதலில் பாதியாக எட்டித் தோன்றிய அன்னை பின்பு தனியாகவே பிரிந்து இணைந்து நிற்கிறாள். (ஒட்டித் தோன்றிய கோலமே பழையது என்று மணிவாசகர் பாடுகிறார்.

தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும் பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும் சூலமும் தொக்க வளையு முடைத்தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்து தாய் கோத்தும்பீ.'

இங்கே அர்த்தநாரீசுவரக் கோலத்தைத் தொன்மைக் கோலம் என்கிறார். -

அபிராமிபட்டர் இப்போது ஒட்டியிணைந்த அர்த்த நாரீசுவரக் கோலத்தையும், ஒட்டாமல் தனியே இணைந்த கல்யாணசுந்தரக் கோலத்தையும் மனத்திலே தியானம் செய்கிறார்.

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் - செவ்வியும், உங்கள் திருமணக்

கோலமும் சிந்தையுள்ளே,