பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி 66

புரங்களில் இணைந்து பொருந்தியிருக்கும் பெருமாட்டி அபிராமி ஆதலின்,

பொருந்திய முப்புரை

என்கிறார்.

அம்பிகையின் திருமேனியையும் திருக்கரங்களையும் திருவடியையும் தரிசித்துப் போற்றிய இவ்வன்பர் இந்தப் பாட்டில் அவளுடைய தனபாரங்களையும் இடையையும் துதித்து மீட்டும் திருவடியைப் பற்றுகிறார். அவளுடைய இடை கொடிபோல துவண்டு மென்மையாக இருக்கிறதாம், அது பின்னும் அலசும்படி பெருமாட்டியின் தனங்கள் செய்கின்றன. ஞானப்பால் சுரக்கும் ஞான நிலையம் அம்பிகையின் திருநகில்கள். அம்பிகை ஞானமே திரு உருவானவள். ஞானமலைபோல் நிற்கும் இரண்டு நகில்களின் பாரத்தால் அன்னையின் வஞ்சிக்கொடி போன்ற இடை நைந்து வருந்துகிறதாம். அந்தத் தன பாரங்களுக்குப் பக்தர்களும் புலவர்களும் செப்பை உவமை கூறுகிறார்கள். எல்லா உயிர்களையும் படைத்துக்காத்து அழிக்கும் பெரிய விளையாட்டைச் செய்கிறாள் பிராட்டி. பெரிய இந்திரசால வித்தைபோன்றது அவள் செய்யும் இந்தத் திருவிளையாடல், உலகத்து உயிர்களுக்குக் கருணை சுரக்கும் பகுதியையே பிராட்டியின் நகிலாகச் சொல்லலாம். செப்பிடு வித்தைக்காரன் செப்பை வைத்து வித்தை காட்டுவதுபோலே. இந்தப் பிராட்டி மகாமாயையாக இருந்து, திருவுருவம் உடையவளாகக் காட்டிச் செப்பிடி வித்தை செய்கிறாள், அதற்காகத்தான் இந்தச் செப்பை வைத்திருக்கிறாளோ? செப்பிலே பண்டத்தை வைக்கிறவர்கள் அதை நிமிர்த்து வைத்திருப்பார்கள். ஆனால் வித்தைக்காரனோ அதைக் கவிழ்த்து வைத்திருப்பான். அன்னையும் செப்பைக் கவிழ்த்து வைத்திருக்