உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9


ஒட்டைச் சிவிங்கியால் வீசியெறியப்பட்ட அந்தக் குட்டி முயல் அம்புபோல் பறந்து சென்று அந்த வானத்தின் அப்பத்தை அடைந்தது. அந்த வானத்து அப்பம் குட்டிமுயலைப் போல் ஆயிரம் மடங்கு பெரிதாய் இருந்ததால், முயலால் அதை கடித்துத் தின்ன முடியவில்லை. அந்த அப்பம் தான் முயலை விழுங்கி விட்டது.

குழந்தைகளே, நிலாவை உற்று நோக்குங்கள். அதன் நடுவில் அந்தக் குட்டி முயல் இருப்பதை இன்றும் காணலாம்.