பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவடிக் காட்சி 97

  • செம்பொன்னைப் போலவும் பவளக் குன்றத்தைப் போலவும் கோலம் காட்டும் பெருமானே, அடியவர்களிடத்தில் பேரன்பு உடையவனே, திருவதிகை வீரட்டானத்தில் எழுந் தருளியிருக்கும் கடவுளே, உன்னை, விருப்பம் உடையவனே, எங்களை அருளாட்சியில் வைத்துப் பாதுகாக்கும் மன்னனே, எல்லோருக்கும் நாயகனுக உள்ளவனே, எல்லாருக்கும் முதல் வகை உள்ள மூர்த்தியே, அடியார் பங்கிலே இருந்து பாது காப்பவனே, எல்லா யோகியரையும் விட மேலான யோகியாக உள்ளவனே' என்று பலகாலும் சொல்லிச் சொல்லித் துதித்து, ஒவ்வொரு நாளும் உன்னுடைய திருவடிக் காட்சியைக் காணும் பொருட்டு ஏங்கிப் போனேன். (என் ஏக்கத்தைத் தீர்த்துத் திருவடியைத் தரிசிக்கும்படி அருள் புரிய வேண்டும்.) :

(நம்பு-விருப்பம்; அடியார்பால் விருப்பம் உடையவன், அடியாரால் விரும்பப்படுகிறவன் என்று இருவகையில் நம்பன் என்ற சொல்லுக்குப் பொருள் கொள்ளலாம். கோ-அரசன்; தன் அருளாட்சியிலே உலகம் நிகழும்படி கோல் செலுத்து கிறவன். நாதன்-யாவர்க்கும் தலைவன்; 'நாதன் தாள் வாழ்க’’ என்று சிவபுராணத்தில் பாடுகிருர் மணிவாசகர். ஆதிமூர்த்தி: இறைவனே எல்லாப் பொருள்களுக்கும் மூல முதல்வன்; அவன் அடியார் கண் காணும்படி மூர்த்தீகரித்து நிற்கிருன், பங்கன்-பக்கத்தில் உள்ளவன்; அடியவர்கள் பக்கம் சார்ந்து அவர்களுக்கு நலம் புரிபவன். என்று என்றுஎன்று பல காலும் சொல்லிச் சொல்லி, ஏகாரம்: அசை பிரி நிலையாக வைத்து, வேறு ஏதும் சொல்லாமல் இவற்றையே சொல்லி என்றும் பொருள் கொள்ளலாம். பரவி.புகழ்ந்து. திகழ் மலர்-எந்த மலர்களுக்கும் இல்லாத எழிலும் தண்மையும் மணமும் உடையதாக விளங்கும் மலரைப் போன்றதாக உள்ள காண்பான் - தரிசிக்கும் பொருட்டு. அலந்து போனேன்.ஏங்கிச் செயலிழந்து போனேன்.

முன்பெல்லாம் ஒருமையாகச் சொல்லி இறுதியில் வீரட்ட னிரே என்று பன்மையாகச் சொன்னர். ஆர்வம் பொங்கப் புகழும்போது இவ்வாறு மாறி மாறிப் பேசுதல் இயல்பு.