பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 அப்பர் தேவார Վ9I(ՔՅl

இன்பதுன்பங்களை அநுபவித்து மீட்டும் இந்த உலகத்தில் பிறக்கத்தான் வேண்டும். இப்படியே பிறப்பும் இறப்பும் அலை ய2லயாகத் தொடர்ந்து கொண்டே வரும்.

இப்படி உள்ள அவல நிலையை மாற்றுவது எப்படி? காலன் கைப்படாமல், இறப்பும் பிறப்பும் அற்ற இன்ப வாழ் வைப் பெறுவது எப்படி?

இறைவனுடைய திருவருள் கிடைக்குமானுல் காலனுக்கு அஞ்ச வேண்டுவதில்லை. அவன் காலகாலன். அவன் அருளைப் பெறவேண்டுமால்ை, இந்தத் தேகத்தையும் உலக வாழ்வை யும் பெரியனவாக எண்ணி மையல் கொள்ளாமல் அவனிடம் அன்பு வைத்து வழிபட வேண்டும்.

பக்தர்கள் அப்படிச் செய்கிருர்கள். பக்திச் சுவையையுடைய பாடல்களைப் பண்ணுேடு பாடுகிருர்கள். பக்தி மேலீட்டால் ஆடு கிருர்கள். பரமானந்தம் மேற்கொள விம்மி விம்மி நடிக் கிருர்கள். அத்தகைய பக்தர்களை யமவாதனையினின்றும் காப்பாற்றுவான் இறைவன்.

நம் கண்ணில் மணி இருக்கிறது. அதனுல்தான் பார்க் கிருேம். உலகத்தைப் பார்த்தும் நம் உடம்பைப் பார்த்தும் மகிழ்கிருேம். அந்த மணியே இறைவனுக இருந்தால் எப்படி இருக்கும்? எங்கும் இறைவனையே பார்க்கலாம். நீலக் கண்ணுடியை அணி வர்களுக்கு எல்லாம் நீலமயமாகத் தோன்றுகிறது. கண்ணிலுள்ள மணியே இறைவன் மயமாக இருந்தால் பார்க்கும் பொருள்களில் எல்லாம் அவனுடைய தோற்றமே தோன்றும். பக்தர்களுக்குக் கண்ணினுள் மணியாக நின்று பிரபஞ்சம் முழுதும் தன் மயமாக இருப்பதை அவன் . காட்டுவான். -

பண்ணிசைச் சுவைகள் பாடி

ஆடிடும் பக்தர்க்கு என்றும்

கண்ணிடை மணியர் போலும் கடவூர் வீரட்டனரே!