பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 அப்பர் தேவார அமுது:

எங்கும் தம் உருவையே காட்டுவார், திருக்கடவூர்விரட்டத்தில் எழுந்தருளியிருக்கிறவர். (ஆகவே அவரை வழிபடுங்கள்.)"

மக்களுக்கு அறிவுரை சொல்லும் முறையில் இந்தப் பாசுரத்தைப் பாடுகிருர் அப்பர்.

(மண்-நிலவுலகம். குரம்பை என்றது குடிசை போன்ற உடம்பை, உவம ஆகுபெயர்; 'பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை” என்று ஒளவையார் பாடுவார். மதித்து-உயர்ந்த பண்டமாக வைத்து எண்ணி, மையல்-மோகத்தால் உண்டான மயக்கம். விண்ணிடை-வானத்திலுள்ள யமலோகத்தில்வாழும். வேண்டினுல்-உயிரை உடம்பினின்றும் பிரித்துக் கொண்டு போக விரும்பினுல். ஆர். யாரும் இல்லை என்ற எதிர்மறைப் பொருள் தரும் விஞ. -

பண்-இராகங்கள். பண்ணிடை - பண்ணுக்கு இடமாகிய, சுவைகள்-சுவையுள்ள பாடல்கள்; ஆகுபெயர், பாடுவதும் பிறகு பக்தி மிகுதியில்ை ஆடுவதும் அன்பர்களுக்கு இயல்பு.

"படபடென நெஞ்சம் பதைத்துள் நடுக்குறப்

பாடியா டிக்குதித்து’ என்று இந்த இயல்பைத் தாயுமானவர் சொல்கிரு.ர்.

கண்ணிடை மணி - கண்ணுக்குள் பார்ப்பதற்குரியதாக அமைந்த மணி. இறைவரே மணியாக ஆகிவிடுவாராம். அப் போது எங்கும் அவரையே காணும் நிலை வரும். போலும்: அசை. வீரட்டனர் கண்ணிடை மணியர் என்று கூட்டுக.)

'அவ்வாறு நீங்களும் பண்ணில்ை தருமராசனுடைய கொடுமைக்கு ஆளாக வேண்ட்ாம் என்பது குறிப்பு. - நான்காம் திருமுறையில் 31-ஆம் பதிகத்தில் உள்ள இரண்டாவது பாட்டு இது.