பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 அப்பர் தேவார அமுது

"நனைந்தனைய திருவடிஎன் தலைமேல் வைத்தார்

நல்லூர்எம் பெருமாளுர் நல்ல வாறே”

என்று பாடினர். இனி எம்பெருமான் என்னைக் கைவிடமாட் டான். நான் தவறிலுைம் என்னைப் புறம்போகாமல் ஈர்த்து ஆட்கொள்வான். அவனுடைய திருவருள் உறைப்பில்ை காலனல் உண்டாகும் துன்பமும் என்னை அணுகாது’ என்ற உறுதி அவருக்கு உண்டாயிற்று. அதல்ை அவர் ஒரு வகை யான பெருமிதத்தை அடைந்தார். -

திருநெய்த்தானம் என்ற திருத்தலத்துக்குச் சென்று இறைவனைப் பாடினர். அப்போது இந்தப் பெருமித உணர்ச்சி அந்தப் பாடலில் வெளிப்பட்டது. இறைவன் தன் திருவடியை என்மேல் வைத்து ஆட்கொண்டான். அந்தத் திருவடி காலனை விழும்படி உதைத்த பேராற்றலை உடையது. அதன் துணை எனக்கு இருப்பதனுல் எனக்கு இனி யாதோர் அச்சமும்இல்லை’ என்று பாடுகிருர், > -

“எனக்குக் கிடைத்த பேறு எத்தகையது தெரியுமா? காலன வீழும்படி மோதிய திருவடி அது; அந்த வீரச் செய லுக்கு அடையாளமாகக் கழலை அணிந்தது. எம்பெருமான் அந்தத் திருவடியை மட்டும் என்மேல் வைக்கவில்லை. தன் திருவடிகள் இரண்டையும் என்மேலே வைத்தான். கழல்டி இரண்டும் வந்து மேலனவாக இருக்கும் பெரும் பேற்றை யான் பெற்றேன். . . . . * --

காலன வீழ்ச் செற்ற .

கழல் அடி இரண்டும் வந்து என் மேலவாய் இருக்கப்பெற்றேன்.

இதற்கு முன்பெல்லாம் என் மனம் எங்கெங்கோ ஒடித் திரிந்தது. எதை எதையோ நினைத்துக் கொண்டிருந்தேன். என்னுடைய பொல்லாங்கையும் புறச் சமயப் படுகுழியில்