பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைக்குமாறு நினைத்தல் 157 விழுந்து ஏறமாட்டாமல் தவித்த தவிப்பையும், அதல்ை உண்டான கவலைகளையும் எண்ணி எண்ணி ஏங்கினேன். இப் பொழுது அந்த எண்ணங்கள் இருக்குமிடம் தெரியாமல் ஒடி மறைந்தன. இறைவன் திருவடியை நான் முடியாகச் சூட்டிக் கொண்ட பிற்கு பிரபஞ்சத்தையே ஆளும் மன்னனுக்குள்ள பெருமிதத்தோடு இருக்கிறேன்.”

இவ்வாறு எண்ணமிட்ட அப்பர் சுவாமிகள் இறைவனை நோக்கியே சொல்கிரு.ர். நீலமணியைப் பதித்து வைத்தாற் போல, ஆலகால நஞ்சைக் கண்டத்தில் வைத்திருக்கும் திருக் கழுத்தையுடைய பெருமானே, மேன்மையுடன் தோன்றுகின்ற அழகையுடையது திருநெய்த்தானம் என்னும் தலம். அங்கே மரங்கள் அடர்ந்து தழைகள் செறிந்து குளிர்ந்திருக்கும் பொழில்கள் உள்ளன. அவற்றினிடையே உள்ள திருக் கோயிலில் நீ எழுந்தருளியிருக்கிருய், பிறர் கண்டாலே அஞ்சு கின்ற நஞ்சை நீ அழகு பெற்ற நீலமணியைப் போலக் கண், டத்தில் தரித்திருக்கிருய். உன்னை நான் எப்படி நினைக்க வேண்டுமோ அப்படி இடைவிடாமல் நினைத்துக் கொண்டிருக் கிறேன்.”

மேதகத் தோன்றுகின்ற

கோல கெய்த்தானம் என்னும்

குளிர் பொழிற் கோயில் மேய

நீலம் வைத்தனைய கண்ட,

கினைக்குமா நினைக்கின்றேனே.

'முன்பு உன்னை நினைக்கும் போதெல்லாம் வேறு நினைவு கள் வந்து குறுக்கிடும். மனம் சலனம் உள்ளதாக இருந்தமை யால் உன் திருவுருவத்தைத் தெளிவாக உள்ளத்தே நிறுத்த முடியவில்லை. உன் திருவடி தீட்சை பெற்ற பிறகு என் மனம் ‘எங்கும் அலைவதில்லை. ஓடும் வண்டிக்குப் பிரேக் போட்டது மாதிரி நின்றுவிட்டது. அங்கே உன்னுடைய வடிவமே தெரி கின்றது. ஒரு குளத்தில் அலைகள் இல்லாமல் இருந்தால்