பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. இறைவன்வடிவங்களும்

    திருநாமங்களும்


  றைவன் எத்தகையவன் என்ற கேள்விக்கு உலகத்திலுள்ள சமயங்கள் பல பல விதமாக விடை அளிக்கின்றன. இவன் உருவம் உடையவன் என்றும் உருவம் இல்லாதவன் என்றும் சொல்லும் சமயங்கள் இருக்கின்றன. உருவம் உடையவன் என்பவர்கள் தத்தமக்கு ஏற்றபடி அந்த உருவத்தை. வருணிக்கிறார்கள். உருவம் இல்லாதவன் என்றே பல சமயங்கள் சொல்கின்றன.

இந்து சமயம் இரண்டையும் சொல்கிறது. உருவம் உடையவன் என்றும் உருவம் இல்லாத அருவம் உடையவன் என்றும் சொல்கின்றது. இது முரண்பாடாகத் தோன்றுகிறது. அல்லவா?

ஆனால் அந்த முரண்பாட்டைத் தெளிவாக்க என்ன செய்வது?

அவன் இயல்பாகத் தனக்கென்று உருவம் உடையவன் அன்லன்; ஆனால் கருணையினால் வடிவங்களை எடுத்துக் கொள்கிறவன். அவன் தானே விரும்பி உருவத்தை எடுத்துக் கொள் கிறவனாதலின் வெவ்வேறு உருவங்களை எடுத்துக்கொள்கிறான். காலத்திற்கும் இடத்திற்கும் அன்பர்களின் இயல்புக்கும் ஏற்ற படி அவன் மூர்த்தீகரித்து எழுந்தருளுகிருன். அதனால் அவன் மேற்கொள்ளும் வடிவம் ஒன்றல்ல; பல.

“அருவமும் உருவும் ஆகி

அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்”

என்று கந்த புராணம் சொல்கிறது. இந்த அடியிலும் முரண் பாடு இருப்பதுபோலத் தோன்றுகிறது. அவன் அருவம் உடை