பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவனை எதிர்த்து நின்றவர்கள் யாரும் வென்றதில்லை அசுரர்கள் மட்டும் அல்ல. கர்மமே முக்தியை அளிக்கும் என்று சிறிதும் பக்தியில்லாமல் இருந்த தாருகாவனத்து முனி வர்கள் தீய யாகம் செய்து பல பொருள்களை உண்டாக்கி இறைவனை அழிக்க ஏவினர். அவன் அவற்றால் எந்த இன்னலும் அடையவில்லை. அப்படி வந்தவற்றை யெல்லாம். எளிதில் திருக்கரத்தில் வாங்கி ஏந்திக்கொண்டான். தமக்குப் பூமாலை போட வரும்போது சிலர் அதைக் கழுத்தில் போடு வதற்கு முன்பே கையில் வாங்கிக் கொள்வார்கள். சங்கரா" சாரிய சுவாமிகள் இவ்வாறு செய்வதைப் பார்த்திருக்கலாம். இறைவனோ தன்னை மோதவரும் பொருள்களை யெல்லாம் அவ்வாறு வாங்கி வைத்துக் கொண்டான். அப்படி வந்த வற்றில் ஒன்று மான்குட்டி. மாள் குட்டியானாலும் மந்திர வலி மையினால் சிங்கக் குட்டிபோல வீறி எழுந்து வந்தது. அதை இறைவன் ஏற்றுத் தன் திருக்கரத்தில் ஏந்திக் கொண்டான். இப்போது அது மானுக்குரிய இயல்போடு அங்கே இருக்கிறது. ஆண்டவனை அடைந்தவர்கள் கோப தாபம் நீங்கி இருப் பார்கள் என்பதைக் காட்டிக் கொண்டு அது விளங்குகிறது.

மான் மறிக் கையர்

சிவபெருமான் தவத்திருக் கோலத்தோடு இருப்பவன். அவனை யோகேசுவரன் என்று சொல்வார்கள். சடையும். தோலாடையும் அவனைத் தவக்கோலம் உடையவனாகக் காட்டு கின்றன. யோகியாக இருக்கும் அவன் துறவியா? அல்லது' மணந்து கொண்டு பிறகு அந்த மனைவியைத் துறந்து வந்தவனா? அப்படிஇல்லை. இன்றும் அவன் ஒரு மங்கையோடு, உமாதேவியோடு இணைந்தே, வாழ்கிருன்.

மங்கையோ டிருந்தே யோகுசெய் வானை'

என்று பாடுவார் சுந்தரர். மங்கையோடு சேர்ந்திருந்தாலும் அவனுடைய யோகத்துக்குக் குறை உண்டாகவில்லை. அவனை அறிந்தவர்கள் அவனை யோகியாகவே போற்றுகிறார்கள்.