பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 அப்பர் தேவார அமுது

தேர்ப்பாகன் அவன் சொல்லுக்கு இணங்கி அதைச் செலுத்த முயன்றன். தேர் அந்த இடத்தை விட்டுச் சிறி தளவும் நகரவில்லை. "நான் என் செய்வேன்! இந்த இடத் துக்கு மேல் தேர் அசையவில்லையே! இதிலிருந்து இந்த இடம் நம் ஆற்றலுக்கு அடங்கியதன்று என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? இதற்கு மேல் விடாமல் திரும்பிச் செல்வதே நன்று” என்று தேர்ப்பாகன் சொன்னன்.

இராவணனுடைய கோபம் அதிகமாயிற்று. 'நீ கையா லாகாதவன். இந்த இடம் என்ன அப்படிக் கடக்க முடியாத இடம்? இதை நான் ஒருகை பார்க்கிறேன்” என்று கோபத் தோடு விமானத்தினின்றும் இறங்கின்ை. விடுவிடுவென்று கைலாயத்தின் அடிக்குச் சென்ருன். 'என்னுடைய கையால் இந்த மலையைப் பந்து போலத் தூக்கி எறிந்து விடுகிறேன், யார்' என்று வீறு பேசிக்கொண்டு சென்ருன். இரண்டு கை களால் அதை எடுக்க முயன்ருன். முடியவில்லை. நாலு கைகளால் பெயர்க்கலுற்ருன் கைலைமலை அணுவளவும் அசைய வில்லை. எட்டுக் கைகளால் முயன்று தூக்கலானன். அப்போதும் அந்த மலையை ஒன்றும் செய்ய முடியவில்லை. தன்னுடைய இருபது கைகளையும் மலையின் அடியிலே கொடுத்துத் தூக்க முயன்ருன். மலை சிறிது அசைந்தது போல் இருந்தது. "நம்முடைய வலிமைக்கு முன் இது எம்மாத் திரம்?’ என்று எண்ணினன். கைலை சிறிது இடம் கொடுக் கவே தன் கைகள் இருபதையும் அதன் அடியில் புகுத்தித் தூக்க எண்ணினன். இருபது கைகளும் கைலைமலையின் அடி யிலே புகுந்தன. இதோ ஒரு கணத்தில் இதைத் தூக்கி எறிந்து விடுகிறேன்’ என்ற மிடுக்கு இராவணனுக்கு உண் டாயிற்று. "இந்த மலை நெகிழ்ந்து விட்டது. இதன் அடியில் கைகளைப் புகுத்தி விட்டேன். இனி இதோ ஒரு கணத்தில் தூக்கி எறிந்து விடுகிறேன்” என்று எண்ணித் துரக்க முயன்ருன்.

கைலைமலையின்மேல் பரமசிவனும் பார்வதியும் எழுந் தருளியிருந்தார்கள். அப்போது அம்பிகைக்கு இறைவன்மேல் சற்றே ஊடல் உண்டாயிற்று. அவன் முகத்தைப் பாராமல்