பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| o, மெய்ந்நின்றவர்க்கு மெய்யர்

இறைவன் என்று ஒருவன் இருக்கிருளு? அப்படி இருந்: தால் எல்லோரும் அவனைத் தெரிந்து கொண்டிருக்க வேண் டுமே! எல்லாருக்கும் பொதுவாகத் தோன்றி வெயில் வீசும் கதிரவனக் காணுதார் யார்? கண் இல்லாதவர்களும் அவனு: டைய கிரணங்களின் வெம்மையை உணர்வார்களே! அப்படி இருக்க, எல்லாரினும் மேம்பட்டவனும் எல்லாருக்கும். பொதுவானவனும் எல்லாச் செயல்களுக்கும் காரண பூதனு மாக நிற்பவன் யாவருக்கும் விளங்காதவகை, சிலரே அவன் இருக்கிருன் என்று சொல்லும் நிலையை உடையவகை இருப் பது பொருந்துமா?

இயற்கை என்ற நியதி ஒன்று இருக்கின்றது. அதுவே எல்லாச் செயல்களையும் நிகழ்த்துகிறது. மனிதன் பிறப்பதும். வாழ்வதும் சாவதும் அந்த இயற்கையின் நியதியே. வித்தி லிருந்து மரம் முளைப்பதும் அந்த மரம் மீண்டும் பல வித்துக்களை உண்டாக்குவதும் இயற்கையின் நியதியே.

இவ்வாறு வாதிப்பவர்கள் பலர் இருக்கிருர்கள். எல்லா ரையும் இயக்கும் ஒருவன் யாவருக்கும் புலப்படுபவளுக இருக்கவேண்டும் என்பது அவர்கள் வாதம். -

நம்முடைய உடலில் இரத்த ஓட்டம் நிகழ்கிறது. இதயத் திலிருந்து இரத்தம் எங்கும் பரவுகிறது. சில சமயங்களில் சிலருக்கு இதய நோய் வருகிறது. இதயம் அவருக்கே உரிய தானுலும் அதன் செயல் முறைகள் அவருக்குத் தெரிவதில்லை. இதய நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுகிருர். அவர் பரி சோதித்து இன்ன குறை என்று சொல்கிருர்,

நம் இதயத்தின் குறையோ, முறையோ நமக்கே தெரிவ. தில்லை. நம் பெட்டியில் நாம் பல பொருள்களை வைக்கிருேம்: