பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ந்நின்றவர்க்கு மெய்யர் 6

உண்மை புலகுைம். அல்லாதவர்களுக்கு இது தெரியாது. உணவை உண்ணப்புகுவாருக்கு அதன் சுவை தெரிவது போலச் சத்தியத்தைத் தேடி ஆராய்ச்சி செய்பவர்களுக்கு, சன்மார்க்கத்தில் நிற்பவர்களுக்கு, அந்தப் பரம்பொருள் உண்மையானது, நிலையானது என்பது புலகுைம்.அல்லாதவர் களுக்கு அது பொய் என்றே தோன்றும். மலையைப் பாராதவனுக்கு அது வானுற ஓங்கி நிற்பது விளங்காதது போல மெய்ந்நெறியில் நின்று தேடப்புகுபவர்கள் அல்லாதவர் களுக்கு அந்தப் பரம்பொருள் இல்லாததென்றே தோன்றும்.

சிறிய கல்லக் குளத்தில் போட்டால் அது உடனே உள்ளே ஆழ்ந்துவிடும். பெரிய கல் ஒன்று குளத்தின்மேல் மிதக்கிறது என்று சொன்னல் யாரும் நம்பமாட்டார்கள். அந்தக் கல்லை மிதக்கும் கட்டையின்மேல் வைத்துக் குளத்தில் இட்டால் அது கட்டையோடு சேர்ந்ததல்ை நீரில் ஆழாமல் இருக்கும். மெய்ந்நெறியாகிய கட்டையில் சேர்ந்த அறிவு அறியாமை யென்னும் குளத்தில் ஆழாது. பரம்பொருள் மெய்ந்நெறியில் நின்றவர்களுக்கு மெய்யாகத்தெரிவதுபோல, அல்லாதவர்க்குப் பொய்யாகவே இருக்கும். கண் இல்லாத குருடனுக்குக் காட்சிப் பொருள் தெரியாதது போல அகக்கண் இல்லாதவர்களுக்கு மெய்ப்பொருள் தெரியாது. அதைப் பற்றிச் சொன்னல் அது பொய் என்றுதான் சொல்வான். மெய்ந்நெறியில் நில்லாதவர்களுக்குப் பரம்பொருள் பொய் யென்றே தோன்றும்.

அல்லாதவர்க்கு என்றும் பொய்யர்.

இந்த எண்ணம் திருப்புகலூர் இறைவனைத் தரிசித்த அப்ப ருக்குத் தோன்றுகிறது. புரிகளாக விரிந்த சடையை உடைய வராக விளங்கும் புகலூர்ப் பெருமானைப் பரம்பொருளாகவே. பார்க்கிருர், பானையில் உள்ள நீரைப் பார்ப்பவனும் உண்டு. பானையைப் பார்ப்பவனும் உண்டு. நீரைப்பார்ப்பவனே தாகத்

தைத் தீர்த்துக் கொள்ள முயல்வான். திருப்புகலூரில் புரிந்த