88 அப்பாத்துரையம் – 11
முதலாம் பராந்தகன்
முதலாம் பராந்தகன் (907-953) காலத்தில் சோழ அரசு திடுமென ஒரு பேரரசாக விரைந்து வளர்ந்தது. பராந்தகன் வடக்கே பாணமன்னர், வைடும்பர் இருவரையும் முறியடித்தான். பாணர் நாட்டைத் தன் நேச அரசனும் தன் மேலாட்சியை ஏற்றுக் கொண்டவனுமான கங்க அரசன் இரண்டாம் பிருதிவீபதிக்குத் தந்தான். வைடும்பர் நாட்டை தன் அரசுடன் சேர்த்துக் கொண்டான். சீட்புளி நாட்டை வென்றதனால் வடக்கே அவன் ஆட்சி, நெல்லூர் வரை எட்டிற்று.
தெற்கே பராந்தகன் பாண்டி நாட்டின்மீது படையெடுத்து அதை வென்றான். பாண்டியனோடு இலங்கை அரசன் படைகளையும் சேர்த்து அவன் வேலூர்ப்போரில் வெற்றிகொண்டு, 'மதுரையும் ஈழமும் கொண்ட சோழன்' என்று விருது சூட்டிக் கொண்டான். பாண்டியன் முதலில் இலங்கைக்கு ஓடிச் சென்றான். இலங்கை அரசன் பாண்டியனை ஆதரித்தாலும், தம் அரசன் அவனுக்கு அடைக்கலம் தருவதை உயர் குடிமக்கள் விரும்பவில்லை. ஆகவே அவன் சேர நாட்டுக்கு ஓடவேண்டி வந்தது. சேரன் பாண்டியனுக்கு மட்டுமல்லாமல்-சோழனுக்கும் உறவினன். ஆகவே பாண்டியன் தன் மணிமுடியையும், இந்திர மாலை என்று புகழப்பட்ட தன் மாலையையும் இலங்கையிலேயே விட்டுச் சென்றான்.
பராந்தகன் மதுரையில் மற்றுமொரு தடவை பாண்டிய அரசுரிமையுடன் பேரரசனாக முடிசூட்டிக் கொள்ள விரும்பினான். இந்நோக்கத்துடன் அவன் இலங்கை மீது படையெடுத்தான்.
வெற்றி காணாமலே அவன் இலங்கைப் போரிலிருந்து மீளவேண்டியதாயிற்று. ஏனெனில், ராஷ்டிரகூடப் பேரரசனான மூன்றாம் கிருஷ்ணன் இதற்குள் வடதிசையில் படையெடுத்தான். இராஷ்டிரகூட மன்னன் உறவினனான கங்க அரசனும், சோழனால் துரத்தப்பட்ட பாண, வைடும்ப அரசரும் அவன் பக்கம் சேர்ந்தனர். ஏறக்குறைய 949ல் நடைபெற்ற தக்கோலப்போரில் சோழன் தோல்வியுற்றான். அவன் மூத்த புதல்வன் இராசாதித்தியன் போரில் இறந்தான். மிக விரைந்து