68 அப்பாத்துரையம் 11
பாலாறு முதல் கிருஷ்ணாவரையுள்ள தொண்டை நாட்டுடன் தற்போதைய கிருஷ்ணா, கோதாவரி மாவட்டங்கள் அடங்கிய வேங்கி நாட்டையும் ஆண்டதாக அறிகிறோம்.
ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில் ஆண்ட பல்லவ அரசன் முதலாம் சிம்ஹவர்மன் ஆவன். இச்சமயம் சிற்றரசராகிய பாணமரபினர் தென்தொண்டை நாட்டில் வலிமை பெற்று வந்தனர். அவர்கள் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கத்துடன் சிம்ஹவர்மன் ஹரிவர்மன் என்ற கங்க அரசனை ஆதரித்து அவனுக்குத் தானே முடிசூட்டினான். இவன் காலத்தில் மைசூரிலுள்ள கங்க அரசர் மீது அவன் ஆதிக்கம் பரவியிருந்தது என்பதை இதனால் அறிகிறோம்.
ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து பல்லவருக்கும், அவர்களுக்கு வடக்கே ஆண்ட சாளுக்கியருக்கும் பெரும்போராட்டம் தொடங்கிற்று.
கி.பி.600 முதல் 630 வரை ஆண்ட பல்லவப் பேரரசன் மகேந்திரவர்மன் ஆவான். இவன் தொடக்கத்தில் சமண மதத்தவனாயிருந்து திருநாவுக்கரசு நாயனாரின் முயற்சியால் சிவநெறி தழுவினான். சமணப் பள்ளிகள் பலவற்றை அழித்து, அவற்றைக் கொண்டே அவன் ‘குணபரன்’ அல்லது ‘குணதரன்’ என்ற தன் பெயரால் ‘குணதரச்சுரம்' என்ற ஒரு சிவன்கோயில் கட்டினான் என்று தெரியவருகிறது. இசையிலும் சிற்பத்திலும் சமஸ்கிருதத்திலும் இவன் வல்லவனாயிருந்தான். சமணனாயிருக்கும்போது இவன் இயற்றிய 'மத்தவிலாசம்' என்ற களிநாடகம் அத்துறையில் தலைசிறந்த ஒன்றாக இன்றும் கருதப்படுகிறது. சித்தன்னவாசல் போன்ற பல குகைக் கோயில்களின் ஓவியம் இவன் காலக் கலைப்பெருமைக்குச் சான்று ஆகும். சாளுக்கியர் இவன் காலத்திறுதியில் பல்லவரை முறியடித்துத் தொண்டை நாட்டையே சூறையாடினதாக அறிகிறோம்.
பல்லவர் தம் புகழின் உச்சி
அடுத்த பேரரசனாகிய முதலாம் நரசிம்மவர்மன் கி.பி. 630 முதல் 668 வரை ஆண்டான். இவன் சாளுக்கியர் மீது பழி தீர்த்துக்