தென்னாடு 71
ஆறு நூற்றாண்டுகளாகத் தமிழகத்திலும் தமிழக எல்லை கடந்து தென்னாட்டின் நடுப்பகுதி முழுவதும் ஆண்ட பல்லவப்பேரரசு பாண்டிய, சாளுக்கிய, கங்க, இராஷ்டிரகூட அரசுகளுடன் நீண்ட போராட்டமாடி வீழ்ச்சியுற்றது.
பல்லவர் ஆட்சிக்காலத்தில் வாணிகமும் குடியேற்றமும் கிழக்கே கடல்கடந்து இந்துசீனா, கிழக்கிந்தியத்தீவுகளில் மிகவும் பரந்தது. பல்லவப்பேரரசர் பலர் தாமே கலைஞராயிருந்து ஓவியம், இசை, சிற்பம் ஆகிய கலைகளை வளர்த்தனர். முற்காலப் பல்லவர் சமண மதத்துக்கும் பிற்பான்மை வைணவ மதத்துக்கும் ஆதரவு செய்து பற்பல கோயில்கள் எழுப்பினர். ஆனால், மொழித்துறையில் அவர்கள் பெரிதும் சமஸ்கிருதத்துக்கே பாடுபட்டனர். தமிழ்ப்புலவராலும் சைவ நாயன்மாராலும், வைணவ ஆழ்வார்களாலும், பாடப்பட்டாலும் அவர்கள் தமிழ் தெலுங்கு ஆகிய எந்தத் தாய்மொழியையும் வளர்க்க முயலவில்லை.
இரண்டாம் பாண்டியப் பேரரசு
சங்க காலத்துக்கும் களப்பிரர் படையெடுப்புக்கும் பின்வந்த பாண்டியர்கள் தொடக்ககாலப் பல்லவர்களைப் போலவே 7ஆம் நூற்றாண்டுவரை சமண சமயத்தைத் தழுவியவராயிருந்தனர். இவர்களில் 3,4,5,6-ம் நூற்றாண்டுகளிலுள்ள பாண்டியர்களைப் பற்றி நாம் இன்னும் மிகுதியாக எதுவும் அறியமுடியவில்லை. அறியத்தக்க சில செய்திகள் முன்பிரிவில் கூறப்பட்டுள்ளன. சைவ, வைணவ இயக்கங்கள் இக்காலத்தில் தோன்றி முதலில் புத்த சமயத்தின் ஆதிக்கத்தை ஒடுக்கி, பின் சமண சமயத்தையும் எதிர்க்கத் தொடங்கின என்று அறிகிறோம்.
இக்காலப் பாண்டியர்களுடன் வேள்விக்குடிச் செப்பேட்டினால் நமக்குத் தெரியவரும் முதல் பாண்டியன் கடுங்கோன் ஆவான். இவன் காலம் ஏறத்தாழ கி.பி. 590 முதல் 610 வரை ஆகும். பாண்டிய அரசு முன்போல் அமைதியும் வலிமையும் பெறத் தொடங்கியது இவன் காலத்திலேயேயாகும். அடுத்த அரசனாகிய மாறவர்மன் அவனிசூளாமணியே இறையனார் அகப்பொருளுறையில் மேற்கோளாகக்