இன்பத்துள் இன்பம்
133
காட்டுகிறது. இந்த இன்ப நாட்டமே உயிர், இந்த முயற்சியே வாழ்வு என்பது கருத்தில் பதிக்கப்படவேண்டிய ஒரு பேருண்மை ஆகும்.
நாடிய இன்பம் கைவரப்பெறாதவர், கைவரப்பெற்ற இன்பத்தால் மகிழ்ச்சியடையாதவர் ஆகியோர் பெறும் உணர்ச்சியே உண்மைத் துன்பம் ஆகும். உளநலம் வாய்ந்த உயிர்களில் இத்துன்பமும் நீடிப்பதில்லை. இயற்கையின் அகத்தூண்டுதல் இத்துன்பத்தின் படிப்பினையை அவர்களுக்குச் சரிவரக் கற்பித்துவிடுகிறது. 'துன்பத்தில் தோயாதே, தூங்காதே! மேலும் இன்பம் நாடு! அதுவே உயிர்ப்பண்பு. ஆர்வமாக இன்பம் நாடு, நாடி அருமுயற்சியில் முனை! ஏனெனில் அந்த ஆர்வமும் அந்த முயற்சியுமே மகிழ்ச்சி, இன்பத்தின் உயிரலை! என்று இயற்கை அவர்கள் அகச்செவியில் ஓதுகிறது. அழுத குழந்தை ஆர்வமாக அடுத்த கணம் பால் குடிப்பதுபோல, அழுத முகம் அடுத்த நொடி சிரிப்பது போல, அவர்கள் மீண்டும் இன்ப நாட்டத்தில் ஆர்வம் கொண்டு முன்னேறுகின்றனர்.
ஆனால், முதுமை எய்திய சிலர் - உடல் முதுமை மட்டும் எய்தியவர் அல்லர், உடல் முதுமையினும் கேடான உ உயிர் முதுமை எய்தியவர்கள் - தாம் பெற்ற துன்பத்தில் தோய்ந்து அதை நிலையானதாக்கி விடுகின்றனர். அத்தகையவர்களுள் சிலர் அத்துன்பத்தில் தாம் தூங்குவதுடன் நில்லாமல், துன்ப 'கீதம்'பாடித் தம்மைச் சுற்றிலும் துன்ப அலைகளைப் பரப்பி விடுகின்றனர்.
‘உலகம் துன்பமயம்!’ ‘எல்லாம் துன்பமயம்!’
வாழ்வாவது மாயம், அது மண்ணாவது திண்ணம்.!’
வை அழகிய பாடல்கள், அழகிய கருத்துகள்தாம். ஆயினும், இவை துன்ப கீதத்தில் தோய்ந்தெழுந்த அடிகளே. வ்வடிகளை மட்டும் தனியாக எடுத்துப் பாடிச் சிலர் துன்ப அலைகளைத் தம்மையும் அறியாமல் பரப்பி விடுகின்றனர். ஆனால், இப் பாடல்களைப் பாடிய பெரியோர்களின் நோக்கம் துன்ப அலைகள் பரப்புவது அல்லவே அல்ல. துன்பஅலை எழுப்பும் கருத்துகளை ஓர் அடி, இரண்டடியில் செறிவுபடச்