158
||_ _
அப்பாத்துரையம் - 15
முத்திறத்தவரும் காணாத, உயிர் முக்கியத்துவத்தில் அவற்றிலும் குறையாத ஓர் உயிர்ப்பண்பைத் திருவள்ளுவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதுவே பிறப்பு, இறப்பு என்பவற்றுடன் நெருங்கிய உயிர்த் தொடர்புடைய விழிப்பு-உறக்கம் ஆகிய இருதிசைப் பண்பு ஆகும்.
‘உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு’
பொய்யாமொழியின் இவ்வாய்மொழியைப் பலர் அழகிய உவமையணியாக மட்டும் கொள்கின்றனர். ஆனால், 'போலும்' என்ற சொல் இங்கே உவமை நவிற்சியணியாகப் பயன்படுத்தப் படவில்லை. வள்ளுவர் குறளில் மட்டுமன்றி, பண்டைத் தமிழர் கவிதை மரபெங்கணும் காணப்படும் முறைப்படி, அது தன்மை நவிற்சியணியாகவே வழங்கப்பட்டுள்ளது. உறக்கம், சாக்காடு ஆகியவற்றின் தன்மைகளையும் தொடர்புகளையும் நாம் உணருந்தோறும், உயிர் வளர்ச்சி பற்றிய பல மெய்ம்மைகள் நமக்குப் புதிது புதிதாக விளங்கும். ஏனெனில் உறக்க நிலைகளில் மிகப் பல வகைகள் உண்டு.
நாள்தோறும் கிட்டத்தட்ட ஒருபாதி நேரம் உறங்காத உயிர்கள் இல்லை. இதுவே உயிர்களின் பொதுத் துயில் நிலை. ஆனால், சில உயிர்கள் இயற்கைப் பருவங்களுக்கேற்ப நீள் துயில் கொள்ளும். பருவ மாறுபாடுகளின் மாறுபாடு கடந்து நீடித்து வாழ இது அவற்றுக்கு உதவுகிறது.
வேறு சில உயிர்கள் தத்தம் வாழ்க்கைப் பருவங்களுக் கிடையே செறிதுயில் கொள்வது உண்டு. இத்தகைய உயிர்களை நாம் இருபிறப்புயிர்கள் என்று கூறுகிறோம். ஏனெனில், இச் செறிதுயில் உண்மையில் ஓருயிரின் வாழ்வில் மட்டும் நிகழும் ஒன்றல்ல. அவ்வுயிரினத்தின் மாள்வு கடந்து அது போராடிய ஒரு நெடுநீள் போராட்ட ஊழியின் சின்னமாகவே இச்செறிதுயில் இனவாழ்வில் நிலைத்துள்ளது.இயற்கையின் எல்லையற்ற காலப் பெருவெளியில் இவ்வினங்களுடன் வாழ்ந்த மற்ற உயிரினங் களெல்லாம் அழிந்தொழிவதற்குக் காரணமான ஒரு பெரும் பருவமாறுதலை, சூழ்நிலை மாறுதலை, இத்தகைய உயிரினங்கள் மட்டுமே இச்செறிதுயில் மூலம் சறிதுயில் மூலம் எதிர்த்துச்சமாளித்து,