அப்பாத்துரையம் - 15
182 ||- விடுகிறது. இந்த அறிவுநிலையையே நாம் சூழ்ச்சி என்கிறோம். நரி முதலிய விலங்கினங்களிலும், கீழ்ப்படியிலுள்ள மனிதரிடத்திலும் நாம் இதைக் காண்கிறோம்.
ஐம்புல அறிவு கடவாத இந்தப் படியையே தொல்காப்பியர் விலங்குகளுக்கும் விலங்குப் படியிலுள்ள மனிதர்க்கும் உரியதாக வகுத்துரைத்தார்.
‘மாவும் மாக்களும் ஐயறிவினவே!' 'மக்கள் தாமே ஆறறி வுயிரே!’
இங்கே 'மா' விலங்கினத்தையும், அதன் பன்மை போலத் தோற்றும் ‘மாக்கள்' விலங்குப் படியிலுள்ள மனிதரையும் குறிக்கிறது. 'மாக்கள்' ஐயறிவு கடவாத மக்கள்; அவர்கள் உருவில் மட்டும் மக்களான விலங்குகள் என்று வள்ளுவர் வழி நின்று தொல்காப்பியர் கட்டுரைத்துள்ளார்.
உணர்ச்சியும் அறிவும் கடந்த படியே மெய்யுணர்வுப் படி. இதில் உணர்ச்சி அறிவையும், அறிவு உணர்ச்சியையும் இயக்கி, இன உணர்வு தோற்றுவிக் கின்றன. அதுவே மெய்யுணர்வு. இந்தப் படியும் உயிரினங்களிலேயே தோன்றி விடுகிறது.கவிஞர் புகழ்ந்து பாடும் பண்டைய தும்பிகள், பறவைகள் ஆகியவற்றின் குடும்ப வாழ்க்கைப் பண்பிலும்; எறும்பு, தேனீ, நாரை, அன்னம், ஆகிய வற்றின் சமுதாய வாழ்விலும்; இரண்டும் நிலவும் யானை, குரங்கு, மனிதன் முதலிய உச்ச உயர் உயிரினங்களிலும் இதன் முதற்கூறு தொடங்குகிறது.உணர்ச்சியும், அறிவும் இனஉணர்வை இயக்கு கின்றன. ஆனால், பண்பட்ட மனித இனத்தில் இனஉணர்வு உணர்ச்சியையும் அறிவையும் இயக்கி இன உணர்வை மெய்யுணர்வாக வளர்க்கின்றது. இதன் உணர்ச்சிக் கூறு மொழியாகவும் இலக்கியமாகவும் கலைகளாகவும் மலர்கின்றது. இதன் அறிவுக்கூறு மொழியை வளர்ப்பதுடன், இயல் நூல்களாக, ஆராய்ச்சியறிவாக வளர்கின்றது. முந்திய கூறு கலைஞர் இனமும், பிந்தியகூறு அறிஞர் இனமும் வளர்க்கின்றது. இரண்டும் இணைந்து இனத்தை நீடித்தியக்கும் இன முதல்குழு அல்லது பண்புக் குழுவை ஆக்குகிறது.
இனமுதல் குழுவே இனத்தின் உயிர். இனம் அதன் உடல். ன முதற் குழுவின் உயிர்ப் பண்பு மெல்ல மெல்ல உடல்