உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

||-

அப்பாத்துரையம் - 19

இன்று சென்னை அரசில் இடம் பெற்ற நிலப்பரப்பிலே, பண்டைப் பாண்டிய நாட்டுப் பகுதிகளான திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை மாவட்டங்கள்; பண்டைச் சோழ நாட்டுப் பகுதிகளான (புதுக்கோட்டை உட்பட) திருச்சி ராப்பள்ளி, தஞ்சை, தென் ஆர்க்காடு மாவட்டங்கள்; பண்டைச் சோழ நாட்டோடிணைந்த தொண்டை நாட்டுப் பகுதிகளான சென்னை,செங்கற்பட்டு, வட ஆர்க்காடு மாவட்டங்களும் அவற்றுடன் இணைந்த சித்தூர் மாவட்டத் தமிழ்ப் பகுதிகளும்; பண்டைச் சேரநாட்டோடிணைந்த கொங்கு நாட்டுப் பகுதிகளான சேலம், கோயமுத்தூர், நீலகிரி மாவட்டங்களும் அவற்றுடன் இணைந்து மைசூர் எல்லையிலிருக்கும் கோலார்ப் பகுதியும், மலபார் எல்லையில் கிடக்கும் பாலக்காட்டு வட்டப் பகுதியும்,நீலகிரிப் பகுதியும், திருவாங்கூர் கொச்சி அரசின் எல்லையிலுள்ள தேவிகுளம், பீர்மேடு வட்டங்களும், செங்கோட்டை வட்டமும், நெய்யாற்றங்கரை வட்டமும், தோவாளை, அகஸ்தீசுரம், இரணியல், கற்குளம், விளவங்கோடு வட்டங்களும் தமிழ்நாடு என்று மீண்டும் தனியுரிமை பெற வேண்டிய இந்திய எல்லைகள் ஆகும்.

தமிழர் குடியேறியும் பண்டிருந்தே தொடர்ந்து வாழ்ந்தும் வந்துள்ள கடல் கடந்த கடந்த பகுதிகள் இலங்கை, மலாயா, தென்கிழக்குத் தீவுகள், தென் கிழக்காசியா, பிஜி, திரினிதாத்து, மொரிசியசு, தென் ஆப்பிரிக்கா, ஜமைக்கா, பிரிட்டிஷ் கயானா ஆகியவை ஆகும். தமிழ்நாடு உருவானால், அதன் பண்பாட்டு விரிவான தமிழகம் அல்லது பெருந் தமிழ்நாடு என்று கூறத்தக்கவை இவை.

தமிழ்நாடு நிலவுலக நடுவரைக்குச் சற்று வடக்கில் வடநேர்வரை (North Latitude) 8 பாகையிலிருந்து 131/2 பாகைவரையும் கீழ் நிரைவரை (East Longtitude) 78 பாகையிலிருந்து 82 பாகைவரையும் பரவியுள்ளது. சென்னை அரசு எல்லைக்குள் கிடக்கும் பகுதியளவிலேயே இதன் நிலப்பரப்பு ஐம்பதினாயிரத்துக்கு மேற்பட்ட சதுர மைல்களும், 2 கோடி 78 நூறாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகையும் உடையது. மொழியுரிமையாக அமையும் மாநிலம் ஐம்பத்தையா யிரம் சதுர மைல் பரப்பும் மூன்று கோடி மக்கள் தொகையும் உடையதாயிருக்கும் என்னலாம்.