உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் செல்வம்

27

தமிழர்கள் நிலத்தைக் குறிஞ்சி அல்லது மலைப் பகுதி என்றும், முல்லை அல்லது காட்டுப் பகுதி என்றும், மருதம் அல்லது ஆற்றுப் பகுதி என்றும், நெய்தல் அல்லது கடற்கரைப் பகுதி என்றும், பாலை அல்லது வளங்குன்றிய பகுதி என்றும் ஐந்திணையாகப் பிரித்திருந்தனர். திருநெல்வேலி மாவட்டத்தின் தென்பகுதியில் ஒரு சிறு பரப்புத் தவிர, தமிழ் உட்பகுதி எதுவும் இன்று பாலை என்று குறிக்கத் தக்கதன்று. மற்ற நால்வகைத் திணைகளும் அவற்றுக்குரிய மலைவளம், காட்டுவளம், ஆற்றுவளம், கடல்வளம் ஆகிய நால்வகை இயற்கை வளங்களும் நிறைந்த முழுநிறை மாநிலம் தமிழ்நாடு.

பண்டை நாகரிக உலகிலும் சரி, இன்றைய உலகிலும் சரி, தமிழகம் இயல்பாகவே உலகின் நடு மய்யமாக அமைந்துள்ளது. ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியாவின் பிற பகுதிகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் கிட்டத்தட்ட அதைச் சுற்றிலும் நிலவுலகில் பதிக்கப்பட்டவைபோலக் கிடக்கின்றன. கடலுலகிலும் இந்துமா கடலில் அதுவும் இலங்கையும் கிட்டத் தட்ட மய்யமாகவே இருக்கின்றது. மனித நடமாட்டமுடைய அட்லாண்டிக் மாகடலும் பசிபிக் மாகடலும் இதன் இரு திசையிலும் உள்ளவையே. கடலுலகின் வாயில்களான ஜிப்ரால்ட்டர், சூயஸ், ஏடன், சிங்கப்பூர், பனாமா ஆகியவற் றிடையேயுள்ள கோட்டின்மீதே தமிழகம் அமைந்துள்ளது காணலாம். உலகின் கடல் நெறிகளும் வான் நெறிகளும் பெரும்பாலும் தமிழ்நாடு அல்லது இலங்கை கடந்தே செல்கின்றன. நிலப்பாதைகள் இவ்வாறு செல்ல முடியா விட்டாலும், எல்லாப் பாதைகளுக்கும் இடங்களுக்கும் தமிழ்நாடு அணிமையுடையதேயாகும்.

தமிழகத்தின் இம் மய்ய அமைப்பே அதை உலகில் முதல் நாகரிக நாடாகவும் நாகரிக முன்னோடியாகவும் உலக நாகரிகத் தாயாகவும் ஆக்கியிருந்தது. உலகின் முதல் கடலோடியின மாகவும் உலகின் முதல் பேரரசு, கடற் பேரரசு, கடல் வாணிக இனம் ஆகவும் அதுவே தமிழகத்தை ஆக்கியிருந்தது.இவ்வியற்கை வாய்ப்புகள் இன்று பயன்படாவிட்டாலும் அணிமை வருங்கால உரிமைத் தமிழகத்தால் இவை நன்கு பயன்படுத்தத் தக்கவையே யாகும்.