உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

||-

அப்பாத்துரையம் - 19

உலகின் தட்பவெப்ப மண்டலங்களுள் தமிழகம் வெப்ப மண்டலத்தினுள்ளே உலக நடுவரை அருகிலேயே உள்ளது. ஆயினும், மட்டற்ற வெப்பம், மட்டற்ற குளிர், மட்டற்ற மழை என்ற நிலைகளுக்கு ஆளான நாடுகளில் தமிழகம் ஒன்றன்று. மட்டான வெப்பம், மட்டான பருவ மழை இவையே அதன் பொது அமைதிகள் ஆகும்.கிழக்கும் தெற்கும் கடலும், மேற்கில் மலையும், வடக்கில் மேட்டுநிலமும் வெப்பத்தை மட்டுப் படுத்துவதுடன் மிகு வெப்பு, மிகு குளிர் நிலைகளைத் தடுக்கின்றன.கோடைக்காலங்களில் அது தில்லியைவிட வெப்புக் குறைவாக உள்ளது. மழை வகையிலும் மேற்குத்தொடர் தென்மேற்குப் பருவ மழையைக் குறைத்துவிடுகிறது.வைகாசி 15 முதல் ஐப்பசி 15 வரை (ஜூன் -அக்டோபர்) வீசும் இப்பருவத்தில் தமிழகத்தின் பெரும் பகுதிக்கு 20 அங்குலம் முதல் நாற்பது அங்குலம் வரை மழை கிடைக்கிறது.

பாண்டி நாட்டில் மலைசாராப் பகுதியில் மட்டும் 20 அங்குலத்துக்குக் குறைந்த மழை பெய்கிறது. அதே சமயம் வடகிழக்குப் பருவத்திலும் ஐப்பசி முதல் மார்கழி வரை (நவம்பர்- திசம்பர்) தஞ்சை மாவட்டத்துக்கு 20 அங்குலத்துக்கு மேலும் பிற தெற்குக் கிழக்கு மாவட்டங்களுக்கெல்லாம் 10 அங்குலத்துக்கு மேலும் மழை பெய்கிறது. இங்ஙனம் ஆண்டுக்கு இரு பருவங்களாக ஆறு மாதகாலம் பரவலாகத் தமிழகத்தின் பெரும் பகுதிக்கு மட்டான மழை கிடைக்கிறது,

தமிழகத்துக்குப் பொதுவாகத் தென் கிழக்குப் பருவ மழையும் மேற்குமலைத் தொடருமே பல ஆறுகளையும் ஆற்று வளங்களையும் தருகின்றன. சில ஆறுகள் கிழக்கு மலைத்தொடரிலும் எழுகின்றன. முக்கியமான ஆறுகள் பாலாறு, தென்பெண்ணை, வெள்ளாறு, காவிரி, வைகை, தாமிரவருணி ஆகியவை. இந்த ஆறுகளின் நீளம், அவற்றின் பிறப்பிடம், ஓடும் மாவட்டங்கள், விழுமிடம், துணையாறுகள், கிளை ஆறுகள் ஆகிய விவரங்கள் வருமாறு.

மிகப் பெரிய ஆறாகிய காவிரியும் மிகச் சிறிதான தாமிரவருணியுமே ஆண்டு முழுதும் நீரோட்டமுடைய உயிர் ஆறுகள். இவை தென்மேற்குப் பருவக் காற்றால் வளம்பெறும் மேற்குத் தொடர்ப் பகுதியில் பிறந்து அடர்ந்த காடுகள் வழியாய்