உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

||-

அப்பாத்துரையம் - 19 வளையல்தொழில், நூற்பு நெசவுத் தொழில்கள், செங்கல் தொழில், மரத்தொழில் ஆகியவை தமிழன் இயற்கையி லிருந்தும் தன் இயற்கை சார்ந்த வாழ்விலிருந்தும் முதன் முதல் கண்டு எடுத்து மனித உலகுக்கு வழங்கிய செல்வங்கள் என்று உலக வரலாறு நமக்கு எடுத் தியம்புகிறது. உலகின் பல மொழிகளிலே இன்னும் இவற்றுக்குரிய சொற்கள் தமிழ்ச் சொற்களாகவே அமைந்துள்ளன.

முத்தும் சங்கும் இன்றும் திருநெல்வேலிக் கடல் தீரத்திலும் இராமநாதபுரக் கடல் தீரத்திலும் முக்கிய தொழிலாகவே உள்ளன. பாரசீக வளைகுடாவிலும், ஆஸ்திரேலிய வட கரையிலும் இப்போது முத்துப் பண்ணைகள் ஏற்பட்டு விட்டாலும், உலகின் முத்து வளத்தின் பெரும்பகுதி இன்னும் தமிழகத் தென் கரைக் குரியதாகவே உள்ளது. மற்ற வகைகளில் இன்று கேலிக்குரியதாகிவிட்ட கூவத்தாறு சிப்பித் தொழிலுக் குரிய சாலையாகவே இன்னும் இயங்குகின்றது. கோலாரில் எடுக்கப்படும் தங்கம் உலகத் தங்கவளத்தில் நூற்றுக்கு இரண்டு விழுக்காடேயானாலும், இந்திய மாநிலத்தின் தங்க வளத்தில் நூற்றுக்கு 90 விழுக்காட்டுக்கு மேற்பட்டதாகும். இதுபோலவே மீன் வளத்தில் உலகில் இந்தியா பிற்பட்டுள்ளதானாலும், தமிழகக் கரையில் அதன் வளம் மிகப் பெரிது. அரசியலாரும் அதில் கருத்தைச் செலுத்தி வளம் பெருக்க முயன்றாலும், நாட்டுரிமை அரசு ஏற்படாத காரணத்தால், கனடா, ஜப்பான், இரஷ்யா ஆகிய நாடுகளைப்போல் அவ் வளம் பெருக்க முடியவில்லை. தென் கடலின் மீன் வகைகள் மற்றக் கடல் களுக்கு ஈடல்லவாயினும், ஏ ஊட்டமிக்க சுறாவுக்கு அதுவே தனிச் சிறப்பான தாயகமாகும். தமிழ்க் கடல் மறவராகிய மீனவர் ஆற்றல் இத் துறையில் போதிய அளவு பயன்படுத்தப் பெறவில்லை.

கோலாரில் மட்டுமின்றிப் பிற தமிழகப் பகுதிகளிலும் தங்கச் சுரங்கங்கள் பண்டை நாள்களில் இருந்ததாக அறிகிறோம். இரும்பும் நிலக்கரியும் பிற உலோகங்களும் கனிப் பொருள்களும் இதுபோலப் பல இடங்களில் வள ஆதார நிலையில் இருப்பதாக அறிகிறோம். இவற்றுள் தென் ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள நெய்வேலிப் பழுப்பு நிலக்கரி இப்போதுதான் அரசியல் முயற்சிக்குரியதாகியுள்ளது.சேலத்திலுள்ள இரும்பும் இதுபோல