உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் செல்வம்

31

இனிப் பயன்படுத்தப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் நம்பப்படுகிறது. ஆனால், இவை இன்னும் இந்திய நடு அரசின் உரிமையாட்சியில் இருப்பதாலும், சென்னை அரசு தமிழக உரிமையரசாய் இல்லாததாலும், இவ் வளங்கள் போதிய அளவு நாட்டை வளப்படுத்தும் முறையில் பயன்படுத்தப்படாமல், பிற பகுதிகளின் நலங் கருதியே ஊக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன.

தஞ்சையில் நில எண்ணெய் கூட இருப்பதாகப் பலர் கருதுகின்றனர். இது வருங்கால நில அகழ்வாய்வாளர் முயற்சிக்குரியது.

தாமிரம் சேலத்திலும், அப்பிரகம் சேலம், கோவையிலும், மானோசைட்நாகர்கோவிலை யடுத்த மணவாளக்குறிச்சியிலும், இரப்பர், தேயிலை, காப்பி ஆகியவை மேற்கு மலைத்தொடரின் இரு சரிவுகளிலும் செல்வவளம் பெருக்க உதவுகின்றன.

பண்டைத் தமிழரசர்கள் காவிரிக்குக் கரைகட்டித் ண்டை நாட்டை வளப்படுத்தியவர் என்று புகழ் பறுகிறார்கள். தமிழரசரும் புலவரும் நீர்ப் பாசனத்தையே மன்னன் கைவளம் தரும் மழையாகப் போற்றினர். தமிழகத்தின் ஆறுகள் இன்று நீர் மின்சார மூலம் புதுவளம் தருபவையாய் உள்ளன. பெரியாற்றுத் திட்டம், பாவநாசத் திட்டம், மேட்டூர்த் திட்டம், மணிமுத்தாற்றுத் திட்டம் ஆகிய திட்டங்கள் தமிழகத்துக்கு உழவு வளமும் நகர நலவாய்ப்பு வளமும் தருவ துடன் தொழில் வளங்களுக்கும் ஆதாரமாகி வருகின்றன. நல்ல தமிழ்த் தேசிய அரசியல் அமைந்தால் இவ் வளங்கள் பன்மடங்கு பெருகும் என்பது உறுதி.

தமிழகத்தின் வேளாண்மை, மழை வளம், ஆற்று வளம், கால்வாய்ப் பாசனவளம், வான்பார்த்த ஏரிவளம், இறைவைக் கிணறுவளம் ஆகியவற்றை எதிர்பார்த்து நடைபெறுபவை. இவற்றுள் இடைக்கால அரசியல் கோளாறு களின்போதும் வெள்ளையராட்சியின் போதும் காடுகள் அழிக்கப்பட்டன. வானம் பார்த்த ஏரிகள் நிலமாக்கப்பட்டு நீர்வளமும் மழை வளமும் குறைந்தன. அத்துடன் புன்செய்கள் நன்செய்களாக்கப் பட்டதனால், நாட்டில் உழவர்க்குப் போதிய நல்ல விலை