உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

||--

அப்பாத்துரையம் - 19

கிடைக்காமலும் தொழிலுக்கான பயிர்கள் அழிவுற்றும் போயின. வருங்கால அரசியல் நாட்டுத் தேவை, பொருளியல் வாழ்வு ஆகியவற்றுக்கேற்ற தேசியத் திட்டம் அமைத்தால், வெள்ளையர் ஆட்சிக்கு முன் இருந்த தமிழக வளத்தை நாம் மீட்டும் பெறுதல் கூடும்.

இயற்கை வளம் வாழ்க்கை வளமாக, மக்கள் ஆள்வளமும் திறவளமும் நன்கு பயன்படுத்தப்படுதல் வேண்டும்.நல்ல அரசியல் இயற்கைவளம் பெருக்கத் திட்டமிடுவதோடு, அதற்கேற்ற மக்கட் பண்பு வளமும் பெருக்குதல் வேண்டும். தொழிலும் உழைப்பும் அறிவும் பயன்படாமல், அயல் நாட்டுக்கு அடிமையாக வாழும் பண்பும் இன்று கற்றவரிடமும் கல்லாதவரிடமும் ஒருங்குப் பரவி வருகிறது. நாட்டுரிமை அரசியல், இயற்கை வளம் பண்படுத்து வதுடன் இம் மக்கள் பண்பு வளமும் பண்படுத்துதல் வேண்டும்.