உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பண்டைத் தமிழர் ஒப்பனைக் கலை

மேலை நாட்டினரிடையே, பெண்டிர் இதழ்க்கும் நகங்களுக்கும் செவ்வண்ணம் பூசுவதையும், முகத்துக்கும் நறுந்துகள் இடுவதையும், முகத்துக்கு மென்கழுநீர் வண்ணச் சாயம் தோய்ப்பதையும் பலர் பார்த்திருப்பர். மேனியை மென்மை யாக்கி வெண்பளிங்குநிறம் தர வாசவெந்நீர், பனிநீர்க்குளிப்பு வகைகள் உண்டு என்பதையும் சிலர் கவனித்திருப்பர்.

புகையிலை, தேயிலை, காப்பி ஆகிய கெட்ட பழக்கங்களைப் போலவே, இந்த நல்ல அல்லது கேடற்ற நாகரிகப் பழக்கங்களும் கீழ்த்திசையிலிருந்து சென்றவை என்பதைப் பலர் அறிவர். ஏனெனில், குளிப்பு வகைகள் இன்றும் துருக்கிய முழுக்கு (Turkish bath), சப்பானிய முழுக்கு (Japanese bath) என்று வழங்கு கின்றன. சவர்க்காரங்கள்கூட ஒரு காலத்தில் பெரும்பாலும் துருக்கிய சவர்க்காரம் (Turkish soap) என்று விளம்பரப்படுத்தப் பட்டதுண்டு.

அழகுக் கலையின் பகுதியாகிய உடல் தேய்ப்புக்குரிய ஆங்கிலச்சொல் (Shampoo) துருக்கியச் சொல்லே.

ஆரியர் வருகைக்கு முன் இந்தியாவெங்கும் இக் கலைகள் பரவியிருந்தன. சமற்கிருதம் பிறக்குமுன் புத்த சமண இலக்கியங் களிலும்,

தொடக்கக்கால சமற்கிருத இலக்கியத்திலும் இக்கலைகள் அழியாதிருந்தன என்பதற்கான குறிப்புகள் காணப்படுகின்றன. இந்தியாவில் பல கலைகளை அழித்த ஆரிய நாகரிகம் இதையும் இங்கே தடந் தெரியாமலாக்கி வெளிநாடு களிலிருந்து வந்தபின் மீண்டும் ஏற்பதில், தான் முந்திக் கொள்கிறது.