உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் செல்வம்

"வேத்தியல், பொதுவியல் என்றுஇரு திறத்துக் கூத்தும், பாட்டும், தூக்கும், துணிவும் பண்ணியாழ்க் கரணமும், பாடைப் பாடலும், தண்ணுமைக் கருவியும், தாழ்தீங் குழலும், கந்துகக் கருத்தும், மடைநூற் செய்தியும், சுந்தரச் சுண்ணமும், தூநீ ராடலும், பாயற் பள்ளியும், பருவத் தொழுக்கமும்,

காயக் காணமும், கண்ணிய துணர்த்தலும், கட்டுரை வகையும், கரந்துறை கணக்கும், வட்டிசைச் செய்தியும், மலர்ஆய்ந்து தொடுத்தலும், கோலங் கோடலும், கோவையின் சேர்ப்பும் காலக் கணிதமும், கலைகளின் துணிவும், நாடக மகளிர்க்கு நன்களம் வகுத்த ஓவியச் செந்நூல், உரைநூல் கிடக்கையும் கற்றுத் துறைபோகிய பொற்றொடி நங்கை”.

35

இதில் இருபத்தாறு கலைகளே கூறப்படுகின்றன. ஆனால், இப்பட்டியல் உயர்குடி நங்கையர்க்குச் சிறப்பாக உரிய கலைகள் மட்டுமே. இதில் அறிவு இயல்கள் (Sciences) ஒன்றிரண்டே உள்ளன. கலைகளே (Arts) மிகுதி. இஃது இயல்பே. இவற்றுள் சுந்தரச் சுண்ண முதல் பாயற் பள்ளிவரை மூன்றும், வட்டிசைச் செய்தி முதல் கோவையின் சேர்ப்புவரை நான்கும், ஆகிய ஏழும் ஒப்பனைக் கலையின் பல பகுதிகள் ஆகும்.

வட்டிசைச் செய்தி என்பது சாந்து அணிதல். கோலங் கோடல் பொது ஒப்பனை. கோவையின் சேர்ப்பு அணிகல ஒப்பனை. பாயற்பள்ளி படுக்கையறை ஒப்பனை. சுந்தரச் சுண்ணம் முகத்தூள் (face powder), மேனித் தூள் (body powder) ஆகியவை. பின்னது இன்றும் வழக்கத்திலுள்ளதே. தூநீராடல், மணத்தூள் கலந்த நறுநீரில் குளித்தல், மலர் ஆய்ந்து தொடுத்தல் பூ ஒப்பனை.

கண்ணுக்கு மையிடுதல், சந்தனம் குங்குமம் இரண்டினாலும், 'தொய்யில்' என்ற சித்திரம் வரைதல், கைக்கும் கால்களுக்கும்