உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

||-

அப்பாத்துரையம் - 19

மட்டுமின்றி, உதட்டுக்கும் நாக்குக்கும் கன்னத்துக்கும் நெற்றிக்கும் கைநகங்களுக்கும் அலத்தகம் அல்லது செம்பஞ்சுக் குழம்பால் சாயம் தீட்டுதல், நறுநெய்க்குளிப்பு, பலவகை நறுநீர்க் குளிப்பு, முகத்துக்கு வண்ணநறுந்துகளிடல், பெண்டிர் கூந்தலுலர்த்த அகிற்புகையிடல் ஆகியவை, தமிழர் ஒப்பனைத் திறத்தின் பகுதிகள்.

நறுநீரில் தமிழர் ஆடவரும் பெண்டிரும் மூன்று தடவை குளித்தனர். மூன்று தடவையும் மூன்றுவகைப் பொடி கலந்த நீரில் ஆடினர். முதல் பொடியில் துவர்ப்பொருள் அதாவது உடலைக் கெட்டியாக்கி மயிர் சுருக்கும் பொருள்கள் வழங்கப்பட்டது. இரண்டாவது விரைப்பொடி மணம் தந்தது. மூன்றாவது ஓமாலிகைப் பொடி மென்மையும் பளபளப்பும் தொய்வும் அளித்தது.

மாதவி இவற்றை வழங்கியதாகச் சிலப்பதிகாரம் கடலாடு காதை கூறுவது காணலாம்.

“பத்துத் துவரினும் ஐந்து விரையினும்

முப்பத் திருவகை ஓமாலி கையினும்

ஊறின நன்னீர் உரைத்தநெய் வாசம் நாறிடும் கூந்தல் நலம்பெற ஆட்டி

புகையில் புலர்த்திய பூமென் கூந்தல்”

புனுகு (புழுகு), நானம் (கஸ்தூரி) முதலியவையும் தேனும் மயிர் வளர்வதற்கும் குரல் கனிவுறுவதற்கும் வழங்கப்பட்டன.

அடியார்க்கு நல்லார் இசை நாடகத் துறையில் பழைய தமிழ் நூல்கள் இருந்ததற்குச் சான்று பகர்ந்து இறந்துபட்ட அந் நூல்களின் சூத்திரங்களைத் தருவது போலவே ஒப்பனைக் கலையிலும் தமிழில் முன் இருந்து இன்று ஆரியர் வரவுக்குப் பின் அழிந்துபட்ட நூல்களிலிருந்து சூத்திரங்கள் தருகிறார்.

பத்துத்துவருக்குச் சூத்திரம்

பூவந்தி திரிபலை புணர்கருங் காலி நாவலொடு நாற்பான் மரமே.