உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் செல்வம்

ஐந்து விரைக்குச் சூத்திரம்

கோட்டம் துருக்கம் தகரம் அகில்ஆரம்

ஒட்டிய ஐந்தும் விரை.

முப்பத்திரண்டு ஓமாலிகைக்குச் சூத்திரம் "இலவங்கம், பச்சிலை, கச்சோலம், ஏலம்

குலவிய நாகணம், கோட்டம், நிலவிய நாகம், மதாவரிசி, தக்கோலம், நன்னாரி வேகமில் வெண்கோட்டம், மேவுசூர் - போகாத கத்தூரி, வேரி, இலாமிச்சம், கண்டில் வெண்ணெய் ஒத்த கருநெல்லி, உயர்தான்றி - துத்தமொடு வண்ணக் கச்சோலம், அரேணுகம், மாஞ்சியுடன் எண்ணும் சயிலேகம், இன்புழுகு - கண்ணுநறும் புன்னை நறுந்தாது, புலியுகிர், பூஞ்சரளம், பின்னு தமாலம், பெருவருளம் - பன்னும் பதுமுகம், நுண்ணேலம், பைங்கொடு வேரி கதிர் நகையாய் ஓமாலிகை."

37

இம் மூன்றையும் வேறுவகையாக நச்சினார்க்கினியர் தம் சிந்தாமணி யுரையில் குறிக்கிறார். தமிழ்நாட்டில் இக் கலையின் வளத்தையும் பல்வகைப் பெருக்கத்தையுமே இது குறிக்கிறது.

நெய்ப்பசை போக அந்நாளில் சந்தனத்துடன் வெள்ளி லோத்திரப் பூவின் உலர்த்திய பொடி கலந்து அரைத்து வழங்கினர். இதுவே நாளடைவில் மேனிச் சவர்க்காரம் (Toilet Soap) ஆக வளர்ச்சியுற்றது. துணிச்சவர்க்காரம் (Washing Soap) வண்ணான் காரத்திலிருந்து வளர்ச்சி பெற்ற தனிக்கலை ஆகும்.

கி.பி.16ஆம் நூற்றாண்டுவரை உலகுக்கெல்லாம் மணப் பொருளும், வண்ணப்பொருளும், இனிய தின்பண்டங்களும், பட்டு, மயிர், பருத்தி ஆடை வகைகளும் முத்துப் பொன்னணி மணியும் ஏற்றுமதி செய்து உலகின் பொருட் களஞ்சியமாக விளங்கியது தமிழகம். சங்க இலக்கியம் மட்டுமின்றி வரலாறுகளும் இதைத் தெரிவிக்கின்றன. இவ் வகையில் வடநாடு