உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் செல்வம்

41

"பெண்களே! உங்கள் பொன் மாலைகள் (காஞ்சி) மட்டும் உடலில் இருந்தன ஆடை (கலிங்கம்) உடலில் இல்லை. அந்த நிலையில் குலோத்துங்கன் உங்களை ஆக்கினான் அல்லவா? அதே நிலைதான் போரிலும் ஆயிற்று. இங்கே காஞ்சி நகரம் அழியாதிருக்கிறது, தமிழகத்தில்! ஆனால், அங்கே வட புலத்தில் கலிங்கம் அழிந்தது.

'இந்தக் கதை உங்களுக்குத் தெரியும். அந்தக் கதை கூறுகிறேன், கேளுங்கள்!' என்று கவிஞர் நூலைத் தொடங்குகிறார்.

கலிங்கப் போரில் வெற்றி கொண்ட மன்னன் முதலாம் குலோத்துங்கன். ஆனால், காஞ்சியிலிருந்துகொண்டே அவன் படையனுப்பித்தான் வெற்றி கொண்டான். கள வெற்றிக்குரிய படைத் தலைவன் கருணாகரத் தொண்டைமான். அவன் முன்பே லங்கையை வென்று அதைச் சோழப் பேரரசில் மாகாணமாகச் சேர்த்தவன். கலிங்கம் வெல்லச் சென்றவனும் அவனே. இதை அடுத்த அடிகள் தெரிவிக்கின்றன.

"இலங்கை எறிந்த கருணாகரன் தன் இகல் வெஞ்சிலையின் - வலிகேட்பீர் கலிங்கம் எறிந்த கருணாகரன் தன் களப்போர் பாடத் – திறமினோ!”

முதலாம் குலோத்துங்கன் கங்கைகொண்ட சோழன் (வங்காளத்தை வென்றவன்) ஆகிய இராச இராசனுடைய மகள் பிள்ளை, அவனுக்கு முன் இராச இராசன் மகன் இராசேந்திரனும் அவன் பிள்ளைகள் மூவரும் புகழுடன் ஆண்டனர். கடைசிப் புதல்வன் வீரராசேந்திரன் மகளை மேலைச் சாளுக்கிய மன்னன் ஆறாம் விக்கிரமாதித்தன் மணந்திருந்தான். பில்கணன் என்ற காஷ்மீரம் சார்ந்த சமற்கிருதக் கவிஞன் அவன் அரசவைப் புலவன். விக்கிரமாதித்தன் தித்தன் சோழ நாட்டை வென்று அதில் தன் மைத்துனனாகிய முன்னைய சோழன் மகனைப் பட்டம் சூட்டியதாகப் பில்கணன் கூற்றால் அறிகிறோம். ஆயினும், மேலைச்சாளுக்கிய கைப்பாவையாகிய அந்த இளவரசனைச் சோழ நாட்டு மக்கள் விரும்பவில்லை. வேங்கி நாட்டில் சோழர் கீழ் அரசனாயிருந்து சக்கரக் கோட்டம் முதலிய இடங்களில் சோழர்