உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42-

||---

அப்பாத்துரையம் - 19

வெற்றிக்கொடி நாட்டிய முதலாம் குலோத்துங்கனையே அவர்கள் அழைத்து முடிசூட்டினர்.

மேனாடுகளிலே அலெக்சாண்டர், சீசர், நெப்போலியன் ஆகிய மூவரே வீரஞ்செறிந்த உலகப் பேரரசர் ஆவர். சோழப் பேரரசர்கள் முதலாம் இராச இராசனும், முதலாம் இராசேந்திரனும், முதலாம் குலோத்துங்கனும் கீழ்த்திசைக்குரிய அலெக்சாண்டர்,சீசர், நெப்போலியன் என்று கூறத்தக்க ஆசியாவின் வீரப்பேரரசர் ஆவர். மூவருமே இந்தியாவையும், இலங்கையையும், பர்மாவையும், மலாயாவையும், இந்துச் சீனாவையும், தென் கிழக்கு ஆசியத் தீவுகளையும் ஒரு சேர ஆண்டனர்.

குலோத்துங்கன் கி.பி.1070 முதல் 1118 வரை ஆண்டான். அவன் பட்டத்தரசி தியாகவல்லி, அரசுக்கு வருமுன்பே அவன் சோழ முன்னோர்கள் ஆண்ட கங்கை நாட்டு எல்லையை விரிவுபடுத்தி ஓரிசா, நாகபுரி பகுதியிலுள்ள மலங்குடி மக்களை அடக்கினான். அத்துடன் சில காலம் கடாரம் அதாவது பர்மா மலாயா பகுதி அரசுரிமையையும் அவன் ஏற்று நடத்தியிருந்தான் என்று தெரிகிறது.

புராணப் பாணியைக் கலிங்கத்துப்பரணி கவிதைப் பின்னணியில் ஓரளவு பின்பற்றி வருகிறது. முதற்பகுதி பாலை நிலத் தெய்வமும் போர்த் தெய்வமுமாகிய காளியையும் பாலைநிலத்தையும் வருணிக்கிறது. அப்பகுதியிலேயே பாலைநில வருணனையிடையே வருணனையாகச் சோழர் தமிழக வெற்றிகள் குறிக்கப்படுகின்றன.

"முள்ளாலும் கல்லாலும் தென்னர் ஓட முன்னொருநாள் வாள்அபயன் முனைந்த போரில் வெள்ளாலும் கோட்டாலும் புகையால் மூட

வெந்தவனம் இந்தவனம் ஒக்கில் ஒக்கும்”

முள்ளாற்றுப் போரிலும் கல்லாற்றுப் போரிலும் சோழன் பாண்டியனைத் துரத்தி ஓட்டினவன். சேரனது வெள்ளாற்றுப் போரிலும் கோட்டாற்றுப் போரிலும் அச் செல்வப் பேரூர்கள் புகைக்கு இரையாயின.

இரண்டாம் பகுதி நகைச்சுவை மலிந்தது. அங்கே காளியின் குடிகளாகிய பேய்களிடையே ஒரு மந்திரவாதப்பேய்