உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் செல்வம்

43

இந்திரசாலம் பண்ணி பொய்ப் போர் உணவு காட்டிப்பேய்களை ஏய்க்கிறது.

மூன்றாம் பகுதியில் புராணத்தை வென்று பாடுகிறார்

கவிஞர்.

கவிஞர் சோழ மரபின் வரலாறு கூறுகிறார், அதனிடையே கரிகாலன் வரலாறு வருகிறது. கரிகாலச் சோழன் இந்தியா முழுவதையும் வென்றுவிட்டான். அப்பால் செல்ல முடிய வில்லை. இமயமலை அவனை மதியாமல் தடுத்து நின்றது. கரிகாலன் கோபங்கொண்டு அதைச் செண்டால் (குண்டாந் தடியால்) அடித்து வீழ்த்தினான். இமய மலை, அய்யோ சரணம், அய்யா சரணம்,' என்றது. அவன் அதைத்தூக்கி நிறுத்தினான். அதன் நெற்றியிலே திருநாமம் சாத்துவது போலப் புலிச் சின்னத்தைப் பொறித்தான்.

அதோடு விடவில்லை!

66

பாரதத்தைப் பிள்ளையார் எழுதினாராமே, இமயத்தில்! கரிகாலன் அந்தப் பாரதத்தை அழித்தான். புதிய பாரதமாக வருங்காலச் சோழ நாட்டு வரலாற்றை அதில் எழுதினான்.

அது மட்டுமோ!

இராமாயணக் கதை நடப்பதற்கு முன்பே வால்மீகி இராமாயணக் கதை எதிர்காலத்தில் இப்படி இப்படி நடக்கும் என்று ஞானக் கண்ணாற் கண்டு எழுதினாராம்! இராமாயணக் கதை, இதற்கேற்ப எதிர்காலத்தில் எழுதப்பட்டிருக்கிறது புராணங்களும், இப்படித்தான். சந்திரகுப்தன் ஆட்சி செய்தான் அவன் மகன் ஆட்சி செய்வான் என்று இவ்வாறு எதிர்காலத் திலேதான் புராணங்கள் வரலாறுகள் எழுதுகின்றன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, புராணிகர் தம்காலம் (கிபி.3ஆம் நூற்றாண்டு) கடந்து எதிர்காலத்தைக் காணமுடியவில்லை. அது போலவே கரிகாலன் எழுதியதாகக் கவிஞர் தரும் சோழ புராணமும் கலிங்கத்துப் போர்வரை வந்து நின்றுவிடுகிறது. கரிகாலன் தனக்குப் பின்னுள்ள சோழர் வரலாறுகளையும் குலோத்துங்கன் வரலாற்றையும் குறித்துப் பின் குலோத்துங்கன் வீர வெற்றியைப் புகழ்ந்து பெருமைப்படுவதாகக் கவிஞர் முடிக்கிறார்.