உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

அப்பாத்துரையம் - 19

நெப்போலியனாகப் புகழ் நாட்டு முன்பே அப்புலவரைப் பாடி

விட்டான்.

அவன் பட்டத்துக்கு வரும் சமயம் பால்மணம் அறாத சின்னஞ்சிறு பையன். சிறு பருவத்தில் அணியும் காப்பை அப்போர்க்காகத்தான் கழற்றி இருந் தான். காப்பு இருந்த கையில் அவன் வாள் ஏந்தப் போர்க்களம் புகுந்தான். சிறுவர் காலில் அணியும் கிண்கிணி சல்லடி சதங்கையை அன்றுதான் கழற்றி அவன் போர்க்குரிய வீரக்கழல் அணிந்தான்.

அவன் சிறுவன் என்று எண்ணி அவன் நாட்டின் புகழைத் தமதாக்க மற்ற அரசர், பேரரசர் எண்ணினார்கள். அரசரும் பேரரசரும் குடியரசருமாக ஏழு பேர் சேர்ந்து தாக்கினார்கள். அது கேட்டு அவன் சினங்கொண்டு போர்க்கு எழுந்தான். புறப்படும்போதே தன் அரசவையில் புலவர், படைத் தலைவர் முன்னிலையில் வெற்றிச் சபதம் எடுத்துக்கொண்டான். அந்தச் சபதமே புற நானூற்றில் (72) ஒரு பாட்டாகக் காட்சியளிக்கிறது. அப்பாட்டிலேயே அவன் மாங்குடி மருதனாரைப் பாடினான்.

ஒட்டக்கூத்தர் இரண்டாம் குலோத்துங்கன் அவைப் புலவர் தலைவராயிருந்ததுபோல மாங்குடி மருதனாரே நெடுஞ்செழியன் காலத்து அவைப் புலவர் தலைவராக இருந்தார். அவர் அருமையைச் சின்னஞ் சிறுவனாகப் பட்டம் ஏறியபோதே நெடுஞ்செழியன் அறிந்திருந்தான் என்பது இப் பாட்டினால் தெரிகிறது. மதுரைக் காஞ்சியை அவர் பாடுவதற்கு நெடுநாள் முன்னரே, அவரை மதிப்பிட்டு அவர்க்குரிய புகழ்ப் பரிசை இப் பாட்டில் அளித்துவிட்டான்.

'இப் போரில் நான் வெற்றி பெறுவது பெறுவது உறுதி; பெறாவிடிலோ, நான் கொடுங்கோலரசன் ஆகுக! என்னைப் புலவர் திலகமாகிய மாங்குடி மருதனார் போன்றவர்கள் பாடாமல் வாராமலே போகட்டும்' என்று அரசன் சூளுரைப் பாடலில் கூறுகின்றான்.

மாங்குடி மருதனார் மட்டுமன்றி அவர்க்குப் பின் புலவர் தலைமையேற்ற நக்கீரனாராலும் வேறு பல புலவராலும் பல இறவாப் பாடல்களில் நெடுஞ் செழியன் புகழப்பட்டான். அவன் புகழுடன் அவன் தலையாலங்கானத்துப் போரின் புகழே