உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் செல்வம்

53

போட்டியிட்டது. ஏனெனில், அவனை நேரில் பாடிய புலவரினும் மிகப் பலர் அப் போரின் புகழ் பாடியுள்ளனர்.

நெடுஞ்செழியன் போன்ற புவிச் சக்கரவர்த்திகள் கவிச்சக் கரவர்த்திகளால் பாடப்பட்டதோடன்றி, தாமே கவிச்சக்கர வர்த்திகளாய் வாழ்ந்த காலம் சங்ககாலம். ஆனால், அந் நாளைய சக்கரவர்த்திகள் பெரும் பெரு சக்கரவர்த்தி களாகிவிடவில்லை. சான்றோராக, மக்களிடையே மக்களாக, ஆனால், மக்களுலகில் மாணிக்கங்களாகத் திகழ்ந்தனர். அவர்கள் அரசர்குடிப் பிறப்பாலோ ஆட்சியாலோ மட்டும் சிறந்த பொது நிலை அரசர்கள் அல்லர். தமிழகத்தின் பண்டைத் தேசியத்தில் திளைத்துத் தேசியத்தின் மணியுருக்களாக அவர்கள் விளங்கினர்.