உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தமிழர் குடியாட்சிப் பண்பு

குடியரசு குடியாட்சி-குடியாட்சி முறை! இந்த மூன்று வடிவங்களில் நாம் குடியாட்சிப் பண்பைக் காணலாம்.

குடியரசு என்பது மன்னன் இல்லாத ஆட்சிக்குப் பெயர். இதன் எதிர்ப்பதமே முடியரசு. ஆனால், மன்னன் இல்லாத ஆட்சி யெல்லாம் குடியாட்சி யாகமாட்டா. குடியரசு என்று மட்டுமே அவற்றைக் கூறுகிறோம். ஏனென்றால், குடியரசில் மன்னன் மரபுரிமை இல்லாத ஒருவர் ஆட்சியுரிமையை முற்றிலும் கைப்பற்றி ஆளலாம். இதை வல்லாளர் ஆட்சி அல்லது சர்வாதிகார ஆட்சி என்கிறோம். தவிர உரிமை சிலரிடமோ, ஒரு வகுப்பாரிடமோ தங்கியிருந்தால் அக் குடியரசுகளை நாம் சிலராட்சி, வகுப்பாட்சி, உயர் வகுப்பாட்சி, குருமாராட்சி, செல்வராட்சி என்கிறோம். ஆளப்படும் மக்களிடம் ஆட்சியுரிமை இல்லாத இந்த ஆட்சிகளை எல்லாம்-முடியரசு, குடியரசு வகைகளையெல்லாம் நாம் ஒரே சொல்லில் வல்லாட்சி அல்லது எதேச்சாதிகாரம் என்கிறோம். ஆட்சியுரிமை மேலிருந்து கீழே, ஆட்சியாளரிடமிருந்து ஆளப்படும் மக்களிடம் வரும் ஆட்சியெல்லாம் வல்லாட்சியே. ஆட்சியுரிமை கீழிருந்து மேலே, ஆளப்படும் மக்களிடமிருந்து ஆள்பவரிடம் சென்றால் மட்டுமே அவ்வாட்சியை நாம் குடியாட்சி என்று கூறமுடியும்.

நிறை குடியாட்சி அல்லது மக்கள் ஆட்சியில் ஆள்பவர், ஆளப்படுபவர் என்ற வேற்றுமை கிடையாது. எல்லாரும் ஆள்பவர்கள் எல்லாரும் எல்லாரையும் ஆளும் ஆட்சிதான் நிறைகுடியாட்சி. அதில் எல்லாரும் மன்னர் எல்லாரும் மக்கள்.

நிறை குடியாட்சி ஒரு குறிக்கோள் மட்டுமே. நடைமுறையில் உலகில் அஃது எங்கும் கிடையாது. ஆனால், அந்தக் குறிக்கோளை நோக்கி, அதன் சிலபல கூறுகளை, முக்கியமான