உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் செல்வம்

55

கூறுகளை உடன்கொண்ட குடியரசுகளைத் தான் நாம் இன்று குடியாட்சி என்று அழைக்கிறோம்.

ம்

ஆட்சி எல்லை மிகப் பெரியதாய் இருந்தால், எல்லாரும் எல்லாரையும் ஆளுவது என்பது முடியாத காரியம். பண்டைக் காலத் தமிழர் ஊராட்சியிலும் கிரேக்க நாட்டில் ஏதேன்சு நகர ஆட்சியிலும் எல்லாரையும் எல்லாரும் ஆளும் முறை நடைமுறையில் இருந்தது. தமிழர் ஊர்களும் ஏதேன்சு நகரமும் இது காரணமாகவே நடுவே அகல் வெளியிட்டுக் கட்டப்பட்டது. சந்தையென்றும் வெளியென்றும் எண்ணப்படும் ஆங்கிலச் சொல் (Forum) ஏதேனியரின் இவ் வகல் வெளியின் பெயரே, தமிழர் இதனை ஊர்ப்பொது, பொதியில், அம்பலம் என்ற சொற்களால் வழங்கினர்.

தொல்காப்பியர் காலத்துக்கு முன்-பல்லாயிர ஆண்டுகட்கு முன்-தமிழர் அனைவரும் சிலபல ஆண்டுகளுக்கொருமுறை பொதிகை மலைச்சாரலில் ஒரு தமிழ்த் தேசியப் பொதுவிடத்தில் கூடினர். அந்த மலை அதனாலேயே 'பொதியில்' என்றும் தமிழ்மலை என்றும் இன்றுவரை வழங்கலாயிற்று. அதுவே தமிழ்த் தெய்வம் வாழும் தெய்வமலை, வடமலை, வெள்ளிமலை, பொன்மலை, வெள்ளியம்பலம் என்று பலவாறாகக் கூறப்பட்டது. அவ்விடத்தில் கூடிய தமிழ்ச் சங்கத்தின் நிலையிருக்கையே தென் மதுரையிலும் அலைவாயிலும் கடைசியில் மதுரையிலும் கூடிற்று.மதுரையும் இதனால் வெள்ளியம்பலம் எனப்பட்டது.

தமிழரைப் போலவே கிரேக்கரும் ஒரு தேசியப் பொதுவிடத்தில் கூடினர். அந்த இடமே தேசிய விழா, தேசியப் பந்தயங்களின் களமான ஒலும்பஸ். இவ் விடத்தில் முதலில் கூடிய ஆண்டு (கி.மு.8ஆம் நூற்றாண்டு) முதலே கிரேக்கர்தம் ஆண்டு ஊழி கணித்தனர். கிரேக்க நாகரிகம் போற்றும் மேனாட்டினர் இன்றும் உலகப் பொதுப் போட்டிப் பந்தயங்களை ஒலிம்பிக் பந்தயங்கள் என்றே நடத்துகின்றனர்.

எல்லாரும் எல்லாரையும் ஆளும் தொல் குடியாட்சி முறையில் தமிழரும் கிரேக்கரும் முதலில் முறை வைத்தே ஆண்டனர். ஆனால், கட்சி பெருகியபின், சிலர்க்கு அவர்கள் வாழ்நாளில் முறைவருவதில்லை. எனவே சீட்டுக் குலுக்கிப்