உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் செல்வம்

57

அம்பலத்தில் சிறுவர் கல்வி கற்பிக்கும் இடம் பள்ளி எனப்பட்டது. அறச்சாலை அறப்பள்ளியாயிற்று. நாடகமாடும் கொட்டகையின் அடிப்புறம் அரங்கு என்றும் மேற்புறம் மாடம் என்றும் பெயர்பெற்றன. இவையே கோவில் கோபுரங்களாகப் பின்னாளில் வளர்ந்தன. புத்த சமணத் தொழுகையிடங்களும் முசுலிம் தொழுகையிடங்களும் இன்று ‘பள்ளி' என்ற இப் பழங்கோயிற் பகுதியின் பெயராலேயே வழங்குகின்றன. கூடம், மாடம் ஆகிய சொற்களிலும் கோவிலின் இடமாகிய கோபுரமும் இம் மரபுகளைக் காட்டுகின்றன.

உட்கோவில் கோவில் என்றும் சிற்றம்பலம் என்றும் கூறப்பட்டன.புறக்கோவில் பேரம்பலம் என்னப்பட்டது. பழைமை வாய்ந்த உட்கோவில் என்ற முறையிலேயே சிற்றம்பலம் என்ற பெயர் மருவிச் சிதம்பரத்தின் பெயராயிற்று.

பழைய குடியாட்சியின் எல்லை விரிய விரிய, எல்லாரும் கூடும் வழக்கம் கைவிடப்பட்டது. பேராள்கள் அல்லது தலைவர்கள் மட்டும் கூடினர். பின் பேராள்கள் தேர்ந்தெடுக்கப் படும் நம் காலத் தேர்தல் முறை தொடங்கிற்று. தேர்ந்தெடுத்த பேராள்கள் மூலமான குடியாட்சி பொறுப்பாட்சி எனப்படுகிறது. இக்குடியாட்சிப் பண்பு இப்போது குடியரசுகளிடம் மட்டுமன்றி, எல்லாக் கட்சி வகைகளிலுமே பரவிவருகிறது.

பிரிட்டன் இன்று குடியரசன்று, முடியரசே. ஆனால், குடியாட்சிப் பண்புக் கும் பொறுப்பாட்சிக்கும் அது தாயகமாகக் கருதப்படுகிறது. அரசர் தனியுரிமை எதிர்த்து மக்கள் குடியுரிமைக்குப் போராடியே இக்குடியாட்சிப் பண்பை மேற்கொண்டுள்ளனர்.

பிரான்சில் முடியாட்சியை எதிர்த்து அரசனை ஒழித்துக் குடியரசுடன் கூடிய குடியாட்சி நடத்துகின்றனர்.

அமெரிக்கா அயல்நாடாகிய பிரிட்டனின் ஆட்சியில் இருந்தது. பிரிட்டனை எதிர்த்துப் போரிட்டு விடுதலை பெற்று, அவ் விடுதலையின் மீதே குடியாட்சி அமைத்தனர்.

-

நாடு, ஆட்சி, உரிமை இவை குடியாட்சியின் மூன்று படிகளென்பதை இம்மூன்று நாடுகளும் காட்டுகின்றன.