உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. புதிய தமிழகத்தின் மூதாதை

-

பத்தொன்பதாம் நூற்றாண்டு தந்த தமிழ்ப் பேரறிஞர் - புதிய தமிழ்க் கலையின் பொன்னார்ந்த தலையூற்று இருபதாம் நூற்றாண்டின் தமிழக இயக்கங்களுக்கெல்லாம் மூல முதல் தந்தை - அன்றே உலகம் போற்றும் மேதையாய் இருந்தும், தமிழகம் நின்று நின்று நினைந்து - உணரத்தக்க அளவில் காலங் கடந்த அறிவு சான்ற பெரியார் - அவர் மரபில் வந்த புதிய தமிழகம், இன்று அவரது பிறப்பின் நூற்றாண்டு நிறைவு விழாவின்போது அவர் பெரு வாழ்வை உள்ளவாறு உணர்ந்து மதிப்பிட்டு, அவர் நினைவால் தமிழகத் தின் வாழ்வு பெருக்க முன் வந்துள்ளது.

பலவகைச்

சிறப்புக்குரிய அவரைத் தமிழகம் ‘மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை' என்ற ஒரு தனிப் பெரும் சிறப்புப் பெயராலேயே இதுகாறும் அறிந்து வந்துள்ளது. "நீராரும் கடலுடுத்த" என்று தொடங்கும் அவரது மனோன் மணீய நாடகத்தின் வணக்கச் செய்யுள், ஒரு நூற்றாண்டாகத் தமிழரின் மறு மலர்ச்சிப் பாடலாக, தமிழர் புதிய தேசியப் பாடலாக நாடெங்கும் உலவி வருகிறது. தமிழகம் முழுநிறை தன்னாட்சி பெற்றுத் தனித் தேசிய இனமாக, தன்னினமாகிய திராவிட இனச் சூழலிடையே தனிநாயகமாய் வீறுடன் அமையும் காலம் நெடுந் தொலைவில் இல்லை. அன்று அப் பாடலே தமிழினத்தின் முதல் விடுதலைப் பண்ணாகவும், முதன்மைத் தேசியப் பண்ணாகவும், இயங்கும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், இத்தேசியப் பண்ணைத் தந்த அவரே எவரையும் விட முனைப்பாகப் புதிய தமிழகத்தின் தந்தை; விழிப்புற்ற தமிழினத்தின் மூல முதல்வர் ஆவார்.

பேராசிரியர் சுந்தரனார் இற்றைக்குச் சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்னால் 1855ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி

-