உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

அப்பாத்துரையம் - 19

வட திருவாங்கூரிலுள்ள ஆலப் புழை என்னும் நகரில் பிறந்தார். அவர் தந்தை அந்நகரில் அறுவை வணிகராய்ச் சிறந்த பெருமாள் பிள்ளை என்பவர். பள்ளிப் படிப்பின்போதே அவர் தந்தை யிடமிருந்து திருக்குறள் முதலிய தமிழ் நூல்களைப் பயின்றார். தம் 16ஆவது ஆண்டில் ஆலப்புழை ஆங்கிலப்பள்ளியில் முதல்வராகத் தேர்ந்து அது முதல் மாதவாரி உபகாரச் சம்பளம் பெற்றார். அவர் உயர் படிப்புத் திருவனந்தபுரம் அரசினர் கல்லூரியில் தொடர்ந்தது. கலை இளைஞர் (பி.ஏ.) தேர்வில் அவர் திருவனந்தபுரத்தின் முதல்வராகவும், சென்னை மாநிலத்தில் நான்காமவராகவும் தேறி, அரசினர் கல்லூரியிலேயே வரலாறு, ஆங்கிலம் ஆகிய இரண்டும் கற்பிக்கும் உரைவாணர் (லெக்சரர்) ஆனார்.

தம் 22ஆவது வயதில் சுந்தரனார் சிவகாமி அம்மையார் என்னும் நங்கையை மணந்தார். அவர் புதல்வர் நடராசனார் இன்று அவர் புகழ் மரபு காப்பவராவர். திருமணத்தை அடுத்து அவர் திருநெல்வேலி இந்து உயர்தரப் பள்ளித் தலைவராக உயர்வுபெற்று, அந் நகரில் அயராது உழைத்தார். அவர் முயற்சியால் அப் பள்ளி இரண்டாந்தரக் கல்லூரியாய் உயர்வுற்று, இன்று மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி திருநெல்வேலி என்னும் பெயருடன் முதல் தரக் கல்லூரியாய் இயங்குகிறது.

1

இரண்டு ஆண்டுகள் சென்றபின் 1879-இல், அவர் மீண்டும் திருவனந்தபுரம் வந்தார். அரசினர் கல்லூரியில் மெய்விளக்கத் துறைப் பேராசிரியராயிருந்த (Professor of Philosophy) திரு ஹார்வி இங்கிலாந்து சென்றதால், அவர் பதவியில் அமர்ந்து தொண்டாற்றினார். இந் நிலையிலேயே 1880-இல் அவர் பல்கலைக் கழக உச்சநிலைப் படியான கலைமன்னர் (எம்.ஏ) பட்டம் பெற்றார். ஐந்தாண்டு இப்பணியாற்றிய பின் அரசர் ஆதரவால் உயர் அரசியல் பணியேற்று சில காலம் இருந்து, மீண்டும் அரசினர் கல்லூரிப் பணிக்கு வந்தார். திரு.ஹார்வியைப் போலவே கல்லூரி முதல்வர் திரு.ராஸூம் தாய் நாடு சென்றதனால், அவர் இருவர் பணியும் ஏற்றார்.

ஜெர்மன் பல்கலைக் கழகமொன்று (நாட்டிங்ஹாம் பல்கலைக் கழகம்) அவரை வரவழைத்துச் சிறப்பித்து