உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் செல்வம்

61

மெய்விளக்கத்துறை முனைவர் (Doctor of Philosophy) பட்டம் வழங்கிற்று. இலண்டனில் மன்னுரிமை வரலாற்றுக் கழகம், மன்னுரிமை ஆசியக் கழகம் ஆகியவை அவர்க்குத் தம் உறுப்பினர் பதவிகள் (F.R.H.S; M.R.A.S.) வழங்கின. சென்னை அரசியல் அவர்க்கு நன்மதிப்புப் பட்டம் வழங்கிற்று. சென்னைப் பல்கலைக் கழகம், வரலாறு, மெய்விளக்கம், தமிழ்த் துறைகளில் அவரைத் தேர்வாளராகக் கொண்டது.

1897 செப்டம்பர் 11-இல் தம் 42 ஆவது வயதில் பேராசிரியர் திடுமென உலக வாழ்வு நீத்தார்.

உலக அரங்கிலும் பிறமொழியிலும் அறிவு நூல் துறைகளிலும் அன்று இந்தியாவிலேயே முதல் வரிசையிடம் வகித்தவர் பேராசிரியர் சுந்தரனார். ஆனால், இன்று தமிழகம் அவரைப் போற்றுவதற்கு அவர் தமிழ்ப்பணியும் தமிழினப் பணியுமே காரணமாகும். நெல்லையில் வாழ்ந்த காலத்தில் சுந்தர முனிவர் என்பவரிடத்திலும், சில காலம் நாகப்பட்டினத்தில் மறைமலையடிகளாரின் ஆசிரியரான நாராயண பிள்ளை யிடத்திலும் தமிழ் அறிவு பெற்றார். அத்துடன் மனோன்மணீயம் என்ற ஒப்பற்ற நாடகக் காப்பியத்தையும், நூற்றொகை விளக்கம் என்ற புத்தறிவு நூலையும் திருநெல்வேலியில் 1877-இல் தொடங்கி, திருவனந்தபுரத்தில் 1880-இல் முடித்தார். இரண்டும் அவர் சீரிய தமிழ்ப் புலமையையும் காலங்கடந்த அவர் அறிவாராய்ச்சித் திறனையும், கலைத் திறனையும் காட்டுகின்றன. தவிர திருவாங்கூர் மன்னர் வரலாறு, தமிழ் மொழி வரலாறு ஆகிய இரண்டு துறைகளிலும் ஊக்கம் செலுத்தி, அத்துறை ஆராய்ச்சிகளால் அவர் அரசியலா ராலேயே நன்கு மதிக்கப்பட்டார். தமிழகத்தில் அறிவியல் (விஞ்ஞான) அறிவு பரப்ப அவர் அரசியலார் ஆதரவு பெற்று ஒரு சொற்பொழிவு மன்றம் அமைத்து, அதில் அத்துறை அறிவை வளர்த்தார். நூல் தொகை விளக்கம் இக் கழகத்தில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு வடிவமேயாகும்.

தமிழ் மொழி, இலக்கியம், தமிழக வரலாற்றாராய்ச்சி களுக்குப் பேராசிரியரின் திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி, முதல் அடிப்படைக் கல் நாட்டிற்று என்னலாம். அது 1895-இல் புத்தக வடிவமாக வெளியாயிற்று. இக் கட்டுரையும், திருவாங்கூர்