உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் செல்வம்

63

இலக்கியச் சிறப்புடனும் நாடகச் சிறப்புடனும் வீறு பெற்றுள்ளன. தவிர ஆசிரியர் தம் ஆசிரியரான சுந்தர முனிவர், ஆசிரியத் தந்தை, மனைத்தக்க மாண்புடைய தம் மனைவி, அவர் ஆர்வமிக்க தம் புதல்வர் ஆகியோரைத் தம் நாடகப் பேழை யிலேயே அழகுச் சித்திரங்களாக்கிப் பெருமைப் படுத்தியுள்ளார். தம் கல்லூரி ஆசிரியரான ஹார்வி பெயரைத் தம் இல்லத்துக்குச் (ஹார்விபுரம்) சூட்டியதுடன் நில்லாது மனோன்மணீயத்தையும் அவர்க்கே படையல் செய்துள்ளார்.

மனைவி பெயராலான சிவகாமி சரிதம் என்ற உட்காவியம் இனிய மனோன்மணீய நாடகக் கனியின் ஒரு இனிமை செறிந்த காவியச் சுனை ஆகும்.

பேராசிரியர் வளர்ந்த காலத் தமிழகம் ஒரு பிற்போக்குத் தமிழகம். யாழ்ப்பாணத்துப் பெருந்தமிழர் ஆறுமுக நாவலர், சென்னைப் பெருந்தமிழர் வடிவேலுசெட்டியார், திரு.வி.கலியாணசுந்தரனார் போன்றவர்கள்கூட வள்ளலாரின் புதுத்தமிழ் அருட்பாவையும் அவர் சமயச் சீர்திருத்த ஆர்வத்தையும் எதிர்த்து ஆங்கிலேயர் வழக்கு மன்றமேறிய காலம் அது. அப்பழைய அறிஞர் மரபு திருத்த ஒரு மறைமலை யடிகளை உருவாக்கிய பெருமையும், புதிய தமிழகத்துக்கு வழிசெய்த பெருமையும் பேராசிரியரையே சாரும். வாழ்க அவர் கனவு கண்டு இன்று நனவாகி வரும் தமிழகம்! வளர்க அவர் வித்திட்ட வண்ணக் காவிய இலக்கிய நறுஞ்சோலை!

று