உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

அப்பாத்துரையம் - 19

ஒருவன் மாண்டான்.இரண்டாவது புதல்வனாகிய இரண்டாம் இராசேந்திரன் விக்கிரமாதித்தியனை முறியடித்து, கீழைச் சாளுக்கிய அரசைக் கைக்கொண்டான். ஆனால், அவன் அதில் குலோத்துங்கனுக்கு முடிசூட்டவில்லை. விசயாதித்தனுக்கு முடிசூட்டினான். ஆயினும் வீரனான குலோத்துங்கனை அவன் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஆகவே, தன் மகள் இராசசுந்தரியை அவனுக்கு மணம் செய்து கொடுத்தான். அத்துடன் கீழைச் சாளுக்கியர்க்கு வடதிசையில் இருந்த கீழ்ச்சுங்க அரசரை வென்று, அந்த அரசை அவனுக்கு அளித்தான்.

குலோத்துங்கன் இப்போதும் வயதில் இளைஞனாகவே இருந்தான். கீழ்ச்சுங்க நாட்டிலும் அவனுக்கு எதிர்ப்பு இருந்தது. கீழ்ச்சுங்கரும் சோழருடன் மண உறவு கொண்டவர்களாகவே ருந்தனர். உறவினருடனே சின்னஞ்சிறு சிற்றரசுகளுக்காகப் போரிடுவதை அவன் விரும்பவில்லை. அவன் அவா மிகவும் பெரிதாயிருந்தது. ஒன்று சோழப் பேரரசராதல் வேண்டும்; அல்லது தன் வாள் வலிமையால் சோழப் பேரரசு போன்ற ஒரு பேரரசைத் தானாக நிறுவுதல் வேண்டும். சோழப் பேரரசனாவது அப்போது எளிதாகத் தோன்றவில்லை. ஆகவே, பிந்திய திட்டத்தை மனத்துட் கொண்டான். தன் இளம் புதல்வி இராச சுந்தரியை அவன் கீழ்ச்சுங்க இளவரசனுக்கே மணஞ்செய்து, அவனுக்கே அரசாட்சியைக் கொடுத்தான். அதன்பின் ஒரு சிறு படையுடன் அவன் புதுப்புலங்கள் வெல்லப் புறப்பட்டான்.

பெயர்.

கீழ்ச்சுங்கர் ஆண்ட பகுதிக்கு வட கலிங்க நாடு என்று அஃது அசோகன் காலத்தில் ஒரு பெரிய பேரரசாயிருந்தது. விக்கிரமாதித்தியன் படையெடுப்பினால், எல்லைப்புறத்திலிருந்த சக்கரக் கோட்டத்தைக் கீழ்ச்சுங்கர் இழந்துவிட்டனர். தன் சிறுபடைகொண்டு குலோத்துங்கன் அதன் மீது படையெடுத்தான். பண்டைக்காலத்திலிருந்தே வெல்லமுடியாத கோட்டைகளுள் ஒன்று என்று பெயரை இது பெற்றிருந்தது. அது காடு சூழ்ந்த, ஒப்பற்ற யானைப் படையும் கோட்டைப் பொறிகளும் உடையதாயிருந்தது. ஒரு சில நாள்களுக்குள் குலோத்துங்கன் அதைத் தூள் தூளாக்கினான். அந்த இடத்தில் தன் புதிய ஆட்சியை நிறுவினான்.