உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் செல்வம்

67

டிக்க

சக்கரக் கோட்டம் ‘பஸ்தர்’ நாட்டின் எல்லையிலிருந்தது. பஸ்தர் நாட்டினர் தம் எல்லைக் கோட்டையை இடி ஒருப்படவில்லை. மலைநாட்டுவீரர்களாகிய அவர்கள் அடிக்கடி அவன் கோட்டையின் வெளியிடங்களில் வந்து சூறையாடித் தொல்லை கொடுத்தனர். ஆகவே, குலோத்துங்கன் மீண்டும் போர்க்கோலம் பூண்டான். மகாநதி கடந்து சென்று அந்த நாட்டில் வலதுசாரி இடதுசாரியாகச் சுற்றித் தன் வீரத்தின் புகழை நிலைநாட்டினான். அவன் சிறிய ஆட்சி விரிவுற்றது. மகாநதிமுதல் கங்கைவரை அவன் காலடியின் கீழ்க் கிடந்தது.

சோழப் பேரரசுக்கு இப்போதும் குலோத்துங்கன் அரசு ஒப்பானதல்ல. ஆனால், அவன் வீரம் கண்டு அவன் உறவினரான கீழைச்சாளுக்கிய, சோழ அரசரும், விக்கிரமாதித்தியனும் புழுக்கமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஒருங்கு கூடி அவனை வீழ்த்த எண்ணினர். இக் கருத்துடன் சோழப் பேரர சனான வீர ராசேந்திரன் தன் மகளை விக்கரமாதித்தியனுக்கு மணம் செய்து கொடுத்தான்.

சோழப் பேரரசுக்கு இப்போது வடக்கே புதுவலுத் தோன்றிவிட்டது. ஆனால், இப்போதும் கிழக்கே கடாரத்தி லுள்ள ஒரு பாதியில் சோழர் கைவரிசை மிகவும் வலுக்குறைந்த தாகவே இருந்தது. அங்கே எப்போதும் சோழர் மண்டலாதி பதிகளாக இருந்த இளவரசர் குடியில் போட்டி பூசல்கள் மிகுதியாயிருந்தன. குலோத்துங்கன் இவற்றைப் பயன்படுத்தி, சோழப் பேரரசிலேயே கீழ்ப்பாதியைக் கைக்கொள்ள முனைந்தான்.

பஸ்தர் மக்கள் குரங்குப் போர்முறையில் கைதேர்ந்தவர்கள், கீழ்ச்சுங்கர் கடலில் கலஞ்செலுத்துவதில் வல்லவர்கள். இந்த இரண்டு நாடுகளிலும் உள்ள வீரர்களைக் குலோத்துங்கன் திரட்டினான்.ஒரு சிறிய கப்பற்படையும், அதனுடன் கடல்கடந்து செல்லும் ஒரு நிலப்படையும் உருவாயின. ஆவலுடன் அவன் கடாரத்தின் மீது படையெடுத்தான். ஒன்றிரண்டு ஆண்டு களுக்குள் கடாரம் வீழ்ந்தது, அவன் கடாரத்தின் பேரரசனானான்.

சோழப் பேரரசுக்கெதிராகத் தன் வலுவைப் பெருக்க அவன், இன்னொரு பேரரசின் உதவியை நாடினான். அவன் சீனப்