உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

அப்பாத்துரையம் - 19

பேரரசருடன் வாணிக ஒப்பந்தம் செய்துகொண்டு கடாரத்திலே வேரூன்றினான். அவன் ஆட்சியில் கடாரத்தின் செல்வமும், புகழும் தமிழகத்தின் செல்வத்துடனும் புகழுடனும்

போட்டியிட்டன.

இச்சமயத்தில் வீர இராசேந்திரன் இறந்தான். அவனுடைய சிறுவன் பெயரளவில் அரசனானான். ஆனால், உண்மையில் அவன் பெயரை வைத்துக் கொண்டு மேலைச் சாளுக்கிய அரசனான விக்கிரமாதித்தியன் சோழ அரசியலில் தலையிட்டான். சோழநாட்டு மக்கள் இதற்கெதிராகக் கிளர்ச்சி செய்தனர். சிறுவனான அரசனைச் சோழர்குடிப் பெரு மக்களே கொன்றொழித்துவிட்டு, குலோத்துங்கனையே சோழப் பேரரசனாகும்படி அழைப்பு விடுத்தனர்.

தன் வாள்வலியினாலே ஒரு பேரரசனாக விளங்கிய குலோத்துங்கனது ஆட்சியில் இப்போது ஒற்றுமை நிலவிற்று. சீனப் பேரரசனுடன் அவன் மீண்டும் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டான். அத்துடன் அவனை மகிழ்விக்கும் எண்ணத்துடன் நாகப்பட்டினத்தில் இராசராசன் காலத்தில் கட்டப்பட்ட புத்தர் கோவிலுக்கு மானியங்கள் அளித்தான். விக்கிரமாதித்தியனுடனும் அவன் சமரசம் செய்துகொண்டு

அமைதியை நிலைநாட்டினான்.

குலோத்துங்க சோழன் நிலைநாட்டிய அமைதி, போர்க்கு இளைத்த கோழையின் அமைதியன்று. இளமையிலே ஒரு நெப்போலியனாயிருந்து முழுவயதில் அரசியல் மதியறிஞனான ஓர் அரசன் விரும்புவது அமைதியையே யாகும். சோழப் பேரரசுக்கு உலகில் ஏற்பட்ட புதிய படித்தரம் இதைக் காட்டுகிறது.

கங்கைக் கரையை ஆண்ட கன்னோசி அரசன் அவனுக்குத் திறை செலுத்தினான்.

சயாம் நாட்டை ஆண்ட காம்போச அரசன் தன் மகனுக்குக் குலோத் துங்கன் என்று பெயரிட்டு அவனுக்குத் திறை அனுப்பினான்.

தமிழக வாணிகம் குலோத்துங்கன் காலத்தில் உலகெங்கும் பரந்து தழைத்தது. உள்நாட்டில் வாணிகத்தை வளர்ப்பதற்