உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் செல்வம்

69

காகவே அவன் ஆங்காங்கே சிற்றரசர் ஆட்சியிலிருந்த சுங்கங்களை எல்லாம் ஒழித்தான். இதனால் அவன் ‘சுங்கம் தவிர்த்த சோழன்' என்று வழங்கப்பட்டான். மாநில முழுவதும் நிலங்களையும் பயிர் வகைகளையும் அளவையிட அவன் ஒரு தனி அரசாங்கத் துறையை உண்டு பண்ணினான். 1086-இல் நடைபெற்ற இந்த அளவையே இன்றளவும் நில அளவையின் அடிப்படையாக இருக்கிறது. இச்செயலால் அவன் ‘நீணில மளந்த சோழன்' என்றும், 'உலகளந்த பெருமாள்' என்றும் புகழப்பட்டான்.

ஆறாண்டு வளர்ச்சியின் பின் சரிந்து போக இருந்த சோழப் பேரரசைக் குலோத்துங்கன் மீண்டும் நூறாண்டு நிலை பெற வைத்தான்.