230
அப்பாத்துரையம் - 24
காதலரை மறப்ப தென்பதோ முடியாத காரியம். சாவுகூடக் காதலைப் பிரிக்க முடியுமே தவிர அதை அழிக்க முடியாது. மேலும் காதலற்ற மணம் செய்துகொள்ளும் மங்கையர் கற்புடையவர்களாக வாழமுடியாது. காதலைப் புறக்கணித்து மணஞ்செய்து கொள்வதினால் கற்புநெறி தவறிவிடும்.அத்துடன் அந்நிலை பெண்மையின் தற்கொலையும் கைப்பிடித்த கணவனுக்குச் செய்யும் வஞ்சனையும் நம்பிக்கைக் கேடுமாகும். இவற்றையெல்லாம் எண்ணினால் என் உயிர்போவது ஒரு பெரிய காரியமல்ல.நான் இருந்து உங்களுக்குத் தரும் நல்ல பெயரைவிட, இறந்து தரும் பெயர் பெரிதாயிருக்கும். என் பெண்மைக்கு இழுக்கு வராமல் காப்பது என் புகழுக்கு மட்டுமல்ல, உங்கள் மரபின் புகழுக்கே நன்று.
66
என்னை நீங்கள் மறந்துவிட வேண்டுமென்றும் மனமார என்னை மன்னிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இறுதி மூச்சுவரை
உங்கள் அன்பு மறவாத புதல்வி
மியூகி”
இக்கடிதம் கண்டு தாய் புழுவாய்த் துடித்தாள். தந்தை மனம் உடைவுற்றது. சோமஸாவாலோ நிகழ்ச்சியின் போக்கு ன்னதென்றே உணர்ந்துகொள்ள முடியாமல் மனம் புழுங்கினான்.படகுத் துறையில் படகுகள் விலகிச் சென்றபோது அவள் விசிறியை எறிந்தது அவனுக்கு இப்போது ஒரு புதுக் கருத்தைத் தந்தது. தான் அவளைத் தந்தையின் படகுக்கனுப்பி விட்டு வேண்டுமென்றே விட்டோடியதாக நினைத்தே, அவள் வெறுப்புடன் தன் காதல் சின்னமான விசிறியை அன்று வீசியெறிந்திருக்க வேண்டுமென்று அவன் நினைத்தான். அவன் காதல் மனம் இடிந்தது. சுவரின்றிக் கடமை எனும் தூண்கள் மட்டுமே தாங்கும் மேற்கூரையாக அவன் உலவினான். அமைதி அவன் அகத்தைவிட்டு அகன்றது.
மியூகியின் தோழி அஸாகே அவள் தாய் தந்தையரின் துயரை ஓரளவு போக்கினாள். “என் தோழி உயிரை வெறுத்திருப்பது உண்மையாயிருக்கலாம். ஆயினும் அவள் காதலை உதறிவிட்டுப் போய்விடமாட்டாள். எப்படியும் அவள்