(118) ||__
அப்பாத்துரையம் - 25
'அப்படியானால் எனக்கு வேறுபுகலிடம் இல்லையா?' என்று குருக்கள்காலில் விழுந்து அவன் கேட்டான்.
ஈவிரக்கத்தின் நிழல் கூட இல்லாமல் குருக்கள் நிலத்தின் மீது காலாலுதைத்து, ‘ஏன் என்னிடம் இன்னும் வாதாடுகிறாய்? நான் உனக்குக் கூறும் புகலிடம் ஒன்றுதான் என் பழிச்சொல்படி நீ நேர்மையற்ற முறையில் கொலை செய்யப்படவேண்டும். உன் பிள்ளையும் பிள்ளையின் பிள்ளையும் அதேபோல் அழிய வேண்டும். இதவே உன் “கர்மநெறி” இதை யாராலும் மாற்ற முடியாது' என்றான்.
விசய: 'கர்மத்திற்கும் இறைவ’னான கட வைத்தால் மாற்றுவார்.
றைவ'னான கடவுள் மனம்
குருக்கள்: கடவுளும் செய்யமாட்டார், குருக்களும் செய்ய மாட்டார், போ.
விசய: நான் போகமாட்டேன். இங்கேயே பட்டினிகிடந்து சாவேன்.
குருக்கள்: நீ என் பழிச்சொல்படி படுகொலைக்குத் தானாளாவாய். பட்டினிகிடந்து இயற்கைச்சாவு சாவது உனக்குக் கிட்டாது.
விசய: அப்படியானால் இப்பழிச்சொல்லின் மரபிற்குரிய நீங்களே சொல்லுங்களேன்.
குருக்கள்: ‘உனக்காக நான் பழி ஏற்க முடியாது. உன் பழி உனக்கே' என்று கூறி அகன்றார்.
விசயரங்கன் கோயிலிலேயே வாயிலில் காத்திருந்தான். நாள்தோறும் முதலைக்குளத்தில் குளிப்பான். மற்றநேர மெல்லாம் உணவுநீர், கொள்ளாமல், கடவுளையே எண்ணி வாயிலில் தவங்கிடப்பான்.
நாள்தோறும் குருக்கள் போகும்போது தன்கொடும் பார்வையை அவன் மீது உறுத்திச் செல்வார். மூன்றாம் நாள் மன்னனுக்கு அசையவும் வலிக்கவில்லை. அச்சமயத்திலும் குருக்கள் ‘மன்னனாய்ப் பிறந்த உனக்குப்பட்டினி கிடந்து சாவதென்பது எளிதன்று, அதிலும் கொள்ளையடித்த செல்வத்தின் கொழுப்பு எளிதில் அகலாது. ஆகவே உன்பழியை