காதல் மயக்கம்
119
மாற்றிவிடும் வீண் முயற்சியைவிட்டு விட்டு இங்கிருந்து போ' என்றார்.
'உடலோடு உணர்வு இருக்கும்வரை இவ்விடம் விட்டுப் பழிநீங்காமல் போகமாட்டேன்' என்றான் அரசன், உறுதி குலையாமல்.
நான்காம் நாள் மாலை அரசன் உணர்விழந்து தடா லென்று கல்தரைமீது விழுந்து காயமடைந்து குருதி ஒழுகக் கிடந்தான்.குருக்கள் அப்போதும் உணர்ச்சியற்றவராய் அவனை விட்டுவிட்டுக் கோயிலினுள் உறங்கச் சென்றார்.
அச்சமயம் அரண்மனையில் திருமலாம்பாள் வலது கண் துடித்தது. அவள் தன் மாமியையும் மக்களையும் அமைச்சர் களையும் அழைத்து ‘என் கணவனுக்கு ஏதோ பெரிய ஆபத்து என்று என் மனம் கூறுகிறது. ஆனால் என்னாலோ வேறு யாராலோ இப்போது ஒன்றும் செய்யமுடியாது. எல்லாரும் கைகூப்பிக் கடவுளிடம் வேண்டிக்கொள்வோம். அவர் அரசன் உயிர் காத்தருள்க' என்று சொன்னாள்.
அனைவரும் ஒருங்கே நின்று இறைவனை மனமார உள்ளன்புடன் உருகிக்துதித்தனர். அன்றிரவு முழுவதும் ஆணும் பெண்ணும் குழந்தையும் வேறு செயலின்றி வணக்கத்திலேயே ஈடுபட்டுக் கண்ணீரும் கம்பலையுமாயிருந்தனர்.
குருக்கள் கண்மூடி ஐந்துநொடிப் பொழுதுகூட இராது. கடவுள் ஒரு குழந்தையுருவில் அவன் கனவில் தோன்றி, "கடவுள் நம் கைக்குள்ளிருக்கிறார் என்ற கர்வத்தினால் கல்நெஞ்சு கொண்ட கஞ்சனே! எனக்களிக்க விருக்கும் படையல்சோறும் நீரும் அவனுக்குக் கொடுத்து உணர்வு வருத்துக. அவன் பழியை நானே அகற்றிவிட்டேன்' என்றார்.
குருக்கள்: என் பழி என்னாவது?
கடவுள்: என்பழியல்லாமல் உனக்குவேறு ஏது பழி? அதுவும் இத்தனை தலைமுறையாக எத்தனையோ மடங்கு தீர்ந்துவிட்டது. ஆகவே நான் கூறியபடிசெய், அல்லது இந்த வேலையை விட்டுப்போ.
குருக்கள் கோயில் தளத்தின்மீது புரண்டார். ‘ஆ, என் தெய்வமே என்னைக் காட்டிக்கொடுத்துவிட்டது. இனி எனக்கு வாழ்வு போயிற்று. பக்தனுமாயிற்று, கடவுளுமாயிற்று! இவ்